ஆட்டோமொபைல்
2021 ஹோண்டா ஹெச்ஆர் வி

சர்வதேச சந்தையில் 2021 ஹோண்டா ஹெச்ஆர் வி அறிமுகம்

Published On 2021-02-19 11:05 GMT   |   Update On 2021-02-19 11:05 GMT
ஹோண்டா நிறுவனத்தின் 2021 ஹெச்ஆர் வி மாடல் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.


ஹோண்டா நிறுவனம் புதிய தலைமுறை ஹெச்ஆர் வி மாடலை ஜப்பானில் அறிமுகம் செய்தது. புதிய மிட்-சைஸ் எஸ்யுவி மூன்றாம் தலைமுறை மாடல் முந்தைய வெர்ஷன்களை விட அளவில் பெரியதாக உள்ளன. 

புதிய காரின் வெளிப்புறம் ஒற்றை நிறத்தால் ஆன ஹெக்சகன் வடிவ முன்புற கிரில், மெல்லிய எல்இடி ஹெட்லேம்ப்கள் உள்ளன. முன்புற பம்ப்பரின் கீழ் சில்வர் நிற ஸ்கிட் பிளேட் வழங்கப்படுகிறது. காரின் பக்கவாட்டில் குறைந்தளவு டிசைன் செய்யப்பட்டு இருக்கிறது.



2021 ஹெச்ஆர் வி மாடலில் 5-ஸ்போக் அலாய் வீல், பிளார்டு வீல் ஆர்ச்கள், பிளாஸ்டிக் கிளாடிங் வழங்கப்பட்டு இருக்கிறது. பின்புறம் ராப்-அரவுண்ட் ஸ்ப்லிட் ரக எல்இடி டெயில் லேம்ப்கள், டூயல்-டோன் பம்ப்பர் இடம்பெற்றுள்ளன. உள்புறம் பிளாக் நிற தீம், புளோட்டிங் தொடுதிரை வசதி கொண்ட இன்போடெயின்மென்ட் சிஸ்டம், ஏர்கான் கண்ட்ரோல்கள் உள்ளன.

புதிய ஹெச்ஆர் வி மாடல் 1.5 லிட்டர் i-VTEC பெட்ரோல் என்ஜின் மற்றும் சிவிடி டிரான்ஸ்மிஷன் கொண்டிருக்கிறது. புதிய ஹோண்டா மாடல் இந்திய சந்தையில் அறிமுகம் ஆகுமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. எனினும், அறிமுகமானால் இந்த மாடல் கியா செட்லோஸ், ஹூண்டாய் கிரெட்டா, டாடா ஹேரியர் மற்றும் எம்ஜி ஹெக்டார் மாடல்களுக்கு போட்டியாக அமையும்.
Tags:    

Similar News