ஆட்டோமொபைல்
வாகன மென்பொருள் உருவாக்க புது கூட்டணி அமைத்த போஷ்
போஷ் மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனங்கள் இணைந்து வாகன மென்பொருள் உருவாக்க புது கூட்டணி அமைத்துள்ளன.
போஷ் மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனங்கள் இணைந்த வாகனங்களுக்கான மென்பொருள் பிளாட்பார்மை உருவாக்க இருப்பதாக அறிவித்து உள்ளன. தற்போது வேகமாக வளர்ந்து வரும் எலெக்ட்ரிக் வாகனம் மற்றும் தானியங்கி வாகன தொழில்நுட்பங்கள் துறையில் களமிறங்க இருப்பதை ஒட்டி போஷ் புதிய கூட்டணியை அமைக்கிறது.
கிளவுட் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி புதிய மென்பொருள் வாகனங்களின் கண்டோரல் யூனிட் மற்றும் கணினிகளுக்கு மென்பொருள் கிடைக்க செய்யும் என போஷ் நிறுவனம் தெரிவித்து உள்ளது. இந்த தொழில்நுட்பம் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் அஸ்யூர் மற்றும் போஷ் நிறுவனத்தின் சாப்ட்வேர் மாட்யூல்களை சார்ந்து உருவாகிறது.
இரு நிறுவனங்கள் இணைந்து தற்போதைய மென்பொருளை பயன்படுத்தி சொந்தமாக மென்பொருள் அப்டேட்களை வழங்க இருக்கின்றன. கடந்த வாரம் போக்ஸ்வேகன் நிறுவனம் மைக்ரோசாப்ட் உடன் இணைந்து கிளவுட் கம்ப்யூட்டிங் சார்ந்து மென்பொருள் சேவைகளை உருவாக்க இருப்பதாக அறிவித்தது.