ஆட்டோமொபைல்
மெக்லாரன் அர்டுரா

671 ஹெச்பி திறன் வழங்கும் புதிய சூப்பர்கார் அறிமுகம்

Published On 2021-02-18 16:39 IST   |   Update On 2021-02-18 16:39:00 IST
மெக்லாரன் நிறுவனத்தின் புதிய சூப்பர்கார் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இதன் விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.

மெக்லாரன் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட அர்டுரா மாடல் அறிமுகம் செய்யப்பட்டது. இது மிட்-என்ஜின்டு பிளக்-இன் ஹைப்ரிட் ஸ்போர்ட்ஸ் கார் ஆகும். 

புதிய ஸ்போர்ட்ஸ் கார் மாடலில் 3.0 லிட்டர் ட்வின் டர்போ வி6 என்ஜின் வழங்கப்பட்டு உள்ளது. இந்த என்ஜின் 577 பிஹெச்பி பவர், 584 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் எலெக்ட்ரிக் மோட்டார் வழங்கப்பட்டு இருக்கிறது. இது 94 பிஹெச்பி பவர், 225 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது.



அந்த வகையில் மெக்லாரன் அர்டுரா மாடல் 671 பிஹெச்பி பவர், 804 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 8 ஸ்பீடு டூயல்-கிளட்ச் ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது. இந்த மாடல் மணிக்கு 0 முதல் 100 கிலோமீட்டர் வேகத்தை மூன்றே நொடிகளில் எட்டிவிடும். இந்த கார் மணிக்கு அதிகபட்சம் 330 கிலோமீட்டர் வேகத்தில் சீறிப்பாய்கிறது.

பேட்டரியை பொருத்தவரை 2021 மெக்லாரன் அர்டுரா மாடலில் 7.4 kWh பேட்டரி வழங்கப்பட்டு உள்ளது. இந்த பேட்டரி காரினை எலெக்ட்ரிக் மோடில் 30 கிலோமீட்டர்களை பயணிக்க செய்கிறது. இந்த மோடில் கார் மணிக்கு அதிகபட்சம் 130 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும். இதனை 0 முதல் 80 சதவீதம் வரை சார்ஜ் செய்ய 2.5 மணி நேரம் ஆகும். 

Similar News