ஆட்டோமொபைல்
2021 மாசிராட்டி ஜிப்லி ஹைப்ரிட் இந்தியாவில் அறிமுகம்
மாசிராட்டி நிறுவனத்தின் 2021 ஜிப்லி ஹைப்ரிட் மாடல் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது.
மாசிராட்டி நிறுவனத்தின் புதிய ஜிப்லி ஹைப்ரிட் செடான் மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. புதிய ஹைப்ரிட் 2013 ஆம் ஆண்டு முதல் விற்பனை செய்யப்படும் ஸ்போர்ட்ஸ் செடான் மாடலின் மேம்பட்ட வெர்ஷன் ஆகும்.
எனினும், புதிய வெர்ஷனில் மைல்டு ஹைப்ரிட் பவர்டிரெயின் வழங்கப்பட்டு இருக்கிறது. புதிய ஆடம்பர செடான் மாடல் வி6, வி8 மற்றும் புதிய மைல்டு ஹைப்ரிட் பவர்டிரெயின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. 2021 மாசிராட்டி ஜிப்லி மாடல் துவக்க விலை ரூ. 1.15 கோடி, எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
புதிய ஜிப்லி ஹைப்ரிட் மாடலில் மேம்பட்ட கிரில், புதிய டெயில் லேம்ப் கிளஸ்டர்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன. இதன் முன்புறம் எல்இடி அடாப்டிவ் மேட்ரிக்ஸ் ஹெட்லைட் மற்றும் எல்இடி டிஆர்எல்கள் வழங்கப்பட்டு உள்ளன. இதன் உள்புறம் 10.1 இன்ச் தொடுதிரை வசதி கொண்ட இன்போடெயின்மென்ட் சிஸ்டம் வழங்கப்படுகிறது.
புதிய மாடலில் அட்வான்ஸ்டு டிரைவர் அசிஸ்டண்ஸ் சிஸ்டம் மற்றும் ஸ்கைஹூக் சஸ்பென்ஷன் மற்றும் பிரெம்போ பிரேக்குகள் வழங்கப்பட்டு இருக்கின்றன. 2021 மாசிராட்டி ஜிப்லி மாடலில் 2.0 லிட்டர், 4 சிலிண்டர் பெர்டோல் மைல்டு ஹைப்ரிட் பவர்டிரெயின் வழங்கப்பட்டு உள்ளது.
இந்த என்ஜின் 325 பிஹெச்பி பவர், 450 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இந்த கார் மணிக்கு 0 முதல் 100 கிலோமீட்டர் வேகத்தை வெறும் 5.7 நொிகளில் எட்டிவிடும். மேலும் இந்த கார் மணிக்கு அதிகபட்சம் 255 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டு இருக்கிறது.