ஆட்டோமொபைல்
லெக்சஸ் எல்எஸ் 500ஹெச்

பிரீமியம் விலையில் லெக்சஸ் எல்எஸ் 500ஹெச் ஸ்பெஷல் எடிஷன் அறிமுகம்

Published On 2021-01-19 10:24 GMT   |   Update On 2021-01-19 10:24 GMT
லெக்சஸ் நிறுவனத்தின் எல்எஸ் 500ஹெச் மாடலின் ஸ்பெஷல் எடிஷன் கார் பிரீமியம் விலையில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.


ஆடம்பர கார் உற்பத்தியாளரான லெக்சஸ் இந்திய சந்தையில் எல்எஸ் 500ஹெச் ஸ்பெஷல் எடிஷன் மாடலை அறிமுகம் செய்து உள்ளது. புதிய ஸ்பெஷல் எடிஷன் எல்எஸ் 500ஹெச் நிஷிஜின் என அழைக்கப்படுகிறது. இந்தியாவில் இதன் விலை ரூ. 2.22 கோடி எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

புதிய லெக்சஸ் நிஷிஜின் எடிஷன் வெளிப்புறம் ஜின்-இ-லஸ்டர் நிறம் கொண்டிருக்கிறது. புதிய நிறம் தவிர இந்த மாடலின் பம்ப்பரில் சிறு மாற்றம் செய்யப்பட்டு இருக்கிறது. காரின் உள்புறம் முழுநிலவு கடலில் பிரதிபலிக்கும் நிகழ்வை ஒட்டி பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டு உள்ளது.

இத்துடன் 12.3 இன்ச் டச் ஸ்கிரீன் இன்போடெயின்மென்ட் சிஸ்டம், ஆப்பிள் கார்பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ அம்சம் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் ஸ்டீரிங் வீல் மற்றும் சென்டர் கன்சோல் பட்டன்கள் எளிதில் இயக்கும் வகையில் இடமாற்றம் செய்யப்ப்டடு உள்ளது.



புதிய ஸ்பெஷல் எடிஷன் மாடலிலும் 3.5 லிட்டர் வி6 பெட்ரோல் மோட்டார் மற்றும் இரண்டு எலெக்ட்ரிக் மோட்டார்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன. இவை ஒருங்கிணைந்து 354 பிஹெச்பி பவர் செயல்திறன் வழங்குகின்றன. இத்துடன் 10 ஸ்பீடு ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் வங்கப்படுகிறது.

இந்திய சந்தையில் லெக்சஸ் எல்எஸ் 500ஹெச் மாடல் மெர்சிடிஸ் பென்ஸ் எஸ் கிளாஸ், பிஎம்டபிள்யூ 7 சீரிஸ், ஜாகுவார் எக்ஸ்ஜெ மற்றும் ஆடி ஏ8எல் போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது.
Tags:    

Similar News