பஜாஜ் ஆட்டோ நிறுவனம் 2021 பல்சர் 220எப் மோட்டார்சைக்கிளை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது.
2021 பஜாஜ் பல்சர் 220எப் இந்தியாவில் அறிமுகம்
பதிவு: ஜனவரி 18, 2021 14:03
2021 பஜாஜ் பல்சர் 220எப்
பஜாஜ் ஆட்டோ நிறுவனம் சத்தமின்றி பல்சர் 220எப் மோ்டடார்சைக்கிள் மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய பல்சர் 220எப் மாடல் விலை ரூ. 1.25 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
புதிய பஜாஜ் பல்சர் 220எப் மாடலில் காஸ்மெடிக் மாற்றங்கள் மற்றும் சில புது அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன. அதன்படி இதன் பாடி கிராபிக்ஸ் மாற்றப்பட்டு பிளாக் புளூ மற்றும் பிளாக் ரெட் என இரண்டு வித புதிய நிறங்களில் கிடைக்கிறது.
இத்துடன் மேம்பட்ட இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் வழங்கப்பட்டு இருக்கிறது. இதில் அனலாக் டக்கோமீட்டருடன் செமி-டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோல் வழங்கப்பட்டு உள்ளது. இதன் டிஜிட்டல் ஸ்கிரீன் முன்பை விட அதிக விவரங்களை வழங்குகிறது.
2021 பஜாஜ் பல்சர் 220எப் மாடலில் 220சிசி டிடிஎஸ்-எப்ஐ சிங்கிள் சிலிண்டர் ஆயில் கூல்டு என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 20.4 பிஹெச்பி பவர், 18.55 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்பட்டு உள்ளது.
Related Tags :