ஆட்டோமொபைல்
மஹிந்திரா ஸ்கார்பியோ

புதிய தலைமுறை ஸ்கார்பியோவுக்கு காப்புரிமை பெற்ற மஹிந்திரா

Published On 2020-12-28 16:41 IST   |   Update On 2020-12-28 16:41:00 IST
அடுத்த தலைமுறை ஸ்கார்பியோ மாடலுக்கு புதிய பெயர் பெற காப்புரிமை கோரி விண்ணப்பித்து இருக்கிறது.


மஹிந்திரா நிறுவனம் நான்காம் தலைமுறை ஸ்கார்பியோ மாடலுக்கான காப்புரிமை கோரி விண்ணப்பித்து இருக்கிறது. அதன்படி  ‘SCORPION’ மற்றும் ‘SCORPIOn’ என இரு பெயர்களை பதிவு செய்து இருக்கிறது. விண்ணப்பத்திற்கு இதுவரை அனுமதி வழங்கப்படவில்லை.

முன்னதாக மஹிந்திரா நிறுவனம் ‘Scorpio Sting’ எனும் பெயருக்கு காப்புரிமை பெற்றது. புதிய ஸ்கார்பியோ மாடலுக்கென மஹிந்திரா புதிய லோகோவை வடிவமைத்து வருவதாக கூறப்படுகிறது. புதிய ஸ்கார்பியோ மேம்பட்ட எல்இடி ஹெட்லேம்ப், மல்டி-ஸ்லாட் கிரில், மேம்பட்ட பம்ப்பர்கள் வழங்கப்படுகிறது.



சமீபத்திய ஸ்பை படங்களில் மஹிந்திரா ஸ்கார்பியோ லோயர் வேரியண்ட் ஸ்டீல் வீல்களுடன் சோதனை செய்யப்படுவது தெரியவந்துள்ளது. மேலும் இந்த மாடலில் 6 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது. 

புதிய மஹிந்திரா ஸ்கார்பியோ கார் 2.0 லிட்டர் டீசல் என்ஜின் வழங்கப்படலாம். இந்த என்ஜின் 158 பிஹெச்பி பவர், 400 என்எம் டார்க் செயல்திறன் வழங்கும் என கூறப்படுகிறது. இத்துடன் 6 ஸ்பீடு மேனுவல் அல்லது ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் வழங்கப்படலாம்.

Similar News