ஆட்டோமொபைல்
ஃபோக்ஸ்வேகன் டைகுன்

புதிய காருக்கு அசத்தல் டீசர் வெளியிட்ட ஃபோக்ஸ்வேகன்

Published On 2020-12-23 10:21 GMT   |   Update On 2020-12-23 10:21 GMT
ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் தனது புதிய கார் மாடலுக்கான அசத்தல் டீசரை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டு உள்ளது.


ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் புதிதாக டைகுன் எனும் மாடலை அறிமுகம் செய்ய இருக்கிறது. தற்சமயம் இந்த மாடலுக்கான டீசர் வீடியோ அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டு உள்ளது. 

டீசர் வீடியோவில் புதிய கார் விவரங்கள் தெரியவந்துள்ளது. அதன்படி புதிய டைகுன் மாடல் ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் MQB A0 IN பிளாட்பார்மில் உருவாகி இருக்கிறது. இதன் முன்புறம் சதுரங்க வடிவம் கொண்ட ஹெட்லேம்ப்கள், செங்குத்தான கிரில், பம்ப்பரில் பாக் லேம்ப் மற்றும் ஸ்கிட் பிளேட் ஹவுசிங் செய்யப்பட்டு இருக்கிறது.



இந்த கார் சவுகரியமான 17 இன்ச் டைமண்ட் கட் அலாய் வீல்களை கொண்டிருக்கிறது. காரின் பின்புற குவாட்டர் கிளாஸ் மீது இருக்கும் கிராபிக்ஸ் காரின் தோற்றத்தை ஒட்டுமொத்தமாக மாற்றியமைக்கிறது. இத்துடன் டெயில் லேம்ப்கள் வித்தியாசமாக இருக்கின்றன.

காரின் உள்புற கேபினில் டேஷ்போர்டு மற்றும் டோர் பேனல்களில் வெளிப்புற நிறம் இன்சர்ட் செய்யப்பட்டு இருக்கும் என தெரிகிறது. இத்துடன் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், ஆட்டோ கிளைமேட் கண்ட்ரோல், புதிய மல்டிமீடியா சிஸ்டம், ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்பிளே கனெக்டிவிட்டி வழங்கப்படலாம்.

புதிய ஃபோக்ஸ்வேகன் கார் 1.5 லிட்டர் டிஎஸ்ஐ பெட்ரோல் என்ஜின் கொண்டிருக்கும் என தெரிகிறது. இந்த என்ஜின் 148 பிஹெச்பி பவர், 250 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 7 ஸ்பீடு டிஎஸ்ஜி கியர்பாக்ஸ் வழங்கப்படலாம். 

Tags:    

Similar News