ஆட்டோமொபைல்
மாருதி சுசுகி ஜிம்னி

மாருதி சுசுகி ஜிம்னி இந்திய உற்பத்தி துவக்கம்

Published On 2020-12-21 10:53 GMT   |   Update On 2020-12-21 10:53 GMT
மாருதி சுசுகி நிறுவனத்தின் புதிய ஜிம்னி மாடல் இந்திய உற்பத்தி துவங்கி உள்ளது. இதன் விவரங்களை பார்ப்போம்.

மாருதி சுசுகி நிறுவனம் தனது ஜிம்னி எஸ்யுவி மாடல் உற்பத்தியை இந்தியாவில் துவங்கி உள்ளது. முதற்கட்டமாக மூன்று கதவுகள் கொண்ட ஜிம்னி மாடல் 50 யூனிட்கள் குருகிராமில் உள்ள மாருதி சுசுகி ஆலையில் உற்பத்தி செய்யப்படுகிறது. 

இந்திய உற்பத்திக்கென மாருதி சுசுகி நிறுவனம் ஜிம்னி மாடல் பாகங்களின் சிகேடி கிட்களை ஜப்பானில் இருந்து இறக்குமதி செய்து இருக்கிறது. முதற்கட்ட யூனிட்கள் இறக்குமதி செய்யப்பட்ட சிகேடி கிட்களை கொண்டு உற்பத்தி செய்யப்படு உள்ளது.



ஏற்கனவே வெளியான தகவல்களின் படி மாருதி சுசுகி நிறுவனம் ஜிம்னி மாடலின் ஐந்து கதவுகள் கொண்ட வேரியண்ட்டை இந்திய சந்தையில் அறிமுகம் செய்யலாம் என கூறப்படுகிறது. மாருதி சுசுகி தவிர மஹிந்திரா நிறுவனம் ஐந்து கதவுகள் கொண்ட தார் மாடலை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது.

சுசுகி ஜிம்னி மாடலில் 1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜின் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 105 பிஹெச்பி பவர் வழங்குகிறது. இதே என்ஜின் மாருதி சுசுகி விட்டாரா பிரெஸ்ஸா, எர்டிகா, எக்ஸ்எல்6 மற்றும் சியாஸ் போன்ற மாடல்களிலும் வழங்கப்பட்டு இருக்கிறது.
Tags:    

Similar News