ஆட்டோமொபைல்
ஜீப் காம்பஸ்

சக்திவாய்ந்த என்ஜினுடன் உருவாகும் புதிய ஜீப் காம்பஸ்

Published On 2020-12-01 11:02 GMT   |   Update On 2020-12-01 11:02 GMT
ஜீப் நிறுவனத்தின் புதிய காம்பஸ் ஏழு பேர் பயணிக்கக்கூடிய வேரியண்ட் சக்திவாய்ந்த என்ஜினுடன் வெளியாகும் என கூறப்படுகிறது.


புதிய ஜீப் ஏழு பேர் பயணிக்கக்கூடிய எஸ்யுவி மாடல் பற்றிய விவரங்கள் தொடர்ந்து இணையத்தில் வெளியாகி வருகிறது. அந்த வரிசையில் தற்சமயம் வெளியாகி இருக்கும் தகவல்களில் புதிய ஜீப் மாடலில் 2.0 லிட்டர் டீசல் என்ஜின் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது.

இது 2.0 லிட்டர், 4 சிலிண்டர், மல்டிஜெட் டர்போ டீசல் யூனிட் ஆகும். இந்த என்ஜின் 200 பிஹெச்பி திறன் வழங்கும் வகையில் டியூன் செய்யப்பட்டு இருக்கும் என கூறப்படுகிறது. 



இதே என்ஜின் காம்பஸ் மாடலில் 173 பிஹெச்பி பவர் வழங்குகிறது. எம்ஜி ஹெக்டாரில் இதே என்ஜின் 176 பிஹெச்பி பவர் வழங்குகிறது. இந்த என்ஜினுடன் 9 ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் வழங்கப்படும் என தெரிகிறது.

புதிய ஜீப் மாடல் காம்பஸ் மோனோக் பிளாட்பார்மில் உருவாகி வருகிறது. மூன்றாம் அடுக்கு இருக்கைகளுக்கு ஏற்றவாரு புதிய கார் சற்று நீளமாக இருக்கும் என தெரிகிறது.
Tags:    

Similar News