ஆட்டோமொபைல்
கேம்ரி ஹைப்ரிட் பேஸ்லிப்ட்

சர்வதேச சந்தையில் டொயோட்டா கேம்ரி ஹைப்ரிட் பேஸ்லிப்ட் அறிமுகம்

Published On 2020-11-27 10:31 GMT   |   Update On 2020-11-27 10:31 GMT
டொயோட்டா நிறுவனத்தின் புதிய கேம்ரி ஹைப்ரிட் பேஸ்லிப்ட் மாடல் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது.


டொயோட்டா நிறுவனம் கேம்ரி பேஸ்லிப்ட் மாடலை சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்து உள்ளது. 2021 கேம்ரி ஹைப்ரிட் பேஸ்லிப்ட் மாடலின் வெளிப்புறம் மாற்றப்பட்டு, புதிய இன்டீரியர் மற்றும் பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட்டு இருக்கிறது.

புதிய பேஸ்லிப்ட் செய்யப்பட்ட கேம்ரி ஹைப்ரிட் மாடல் அடுத்த ஆண்டு வாக்கில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது டொயோட்டா நிறுவனத்தின் பிரீமியம் செடான் மாடல் ஆகும். 2021 கேம்ரி ஹைப்ரிட் பேஸ்லிப்ட் மாடலில் புதிய பம்ப்பர், கிரில் வழங்கப்பட்டு உள்ளது. 
 


புதிய செடான் மாடல் 17 இன்ச் மற்றும் 18 இன்ச் அலாய் வீல்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன. இந்த கார் டீப் மெட்டல் கிரே ஆப்ஷனில் கிடைக்கிறது. இதன் உள்புறம் சென்ட்ரல் கன்சோல், புதிய 9 இன்ச் தொடுதிரை வசதி கொண்ட இன்போடெயின்மென்ட் சிஸ்டம், ஆண்ட்ராய்டு ஆட்டோ, ஆப்பிள் கார்பிளே வழங்கப்படுகிறது.

டொயோட்டா கேம்ரி ஹைப்ரிட் மாடலில் 2.5 லிட்டர் ஹைப்ரிட் என்ஜின் வழங்கப்பட்டு உள்ளது. இந்த என்ஜினுடன் எலெக்ட்ரிக் மோட்டார் வழங்கப்பட்டு இருக்கிறது. இது 216 பிஹெச்பி பவர், 221 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் சிவிடி கியர்பாக்ஸ் ஆப்ஷன் வழங்கப்படுகிறது.
Tags:    

Similar News