ஆட்டோமொபைல்
ஹோண்டா சிட்டி

ஹோண்டா சிட்டி ஹேட்ச்பேக் அறிமுகம்

Published On 2020-11-25 11:38 GMT   |   Update On 2020-11-25 11:38 GMT
ஹோண்டா நிறுவனத்தின் புதிய சிட்டி ஹேட்ச்பேக் மாடல் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.


ஹோண்டா சிட்டி ஹேட்ச்பேக் மாடல் அறிமுகம் செய்யப்பட்டு விட்டது. முதற்கட்டமாக இந்த மாடல் தாய்லாந்தில் விற்பனை செய்யப்பட இருக்கிறது. நீண்ட இடைவெளிக்கு பின் சிட்டி ஹேட்ச்பேக் மாடல் வெளியிடப்பட்டு இருக்கிறது.

புதிய ஹோண்டா சிட்டி ஹேட்ச்பேக் மாடல் அந்நிறுவனத்தின் போன தலைமுறை சிட்டி செடான் உருவான பிளாட்பார்மிலேயே உருவாக்கப்பட்டு இருக்கிறது. இந்த கார் பின்புறம் அகலமாகவும், கிடைமட்டமாக பொருத்தப்பட்ட டெயில் லைட்கள் வழங்கப்பட்டு உள்ளன. 



ஹோண்டா வெளியிட்டுள்ள புகைப்படங்களில் சிட்டி ஹேட்ச்பேக் ஆர்எஸ் டர்போ குயிஸ் வேரியண்ட் ஆகும். இதில் பிளாக்டு-அவுட் கிரில், 16 இன்ச் அலாய் வீல்களில் டார்க் குரோம் பினிஷ் செய்யப்பட்டு உள்ளது. காரின் உள்புறம் அதிகளவு மாற்றங்கள் செய்யப்படவில்லை.

சிட்டி ஹேட்ச்பேக் மாடலில் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டு உள்ளது. இந்த என்ஜின் 122 பிஹெச்பி பவர், சிவிடி கியர்பாக்ஸ் வழங்கப்பட்டு இருக்கிறது. 

தென் அமெரிக்கா, தாய்லாந்து, மலேசியா மற்றும் இந்தோனேசியா போன்ற சந்தைகளில் தற்சமயம் விற்பனையாகும் ஹோண்டா ஜாஸ் மாடலுக்கு மாற்றாக புதிய சிட்டி ஹேட்ச்பேக் மாடல் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. 
Tags:    

Similar News