ஆட்டோமொபைல்
டாடா நெக்சான்

உற்பத்தியில் புதிய மைல்கல் கடந்த டாடா நெக்சான்

Published On 2020-11-06 10:34 GMT   |   Update On 2020-11-06 10:34 GMT
டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் நெக்சான் மாடல் உற்பத்தியில் புதிய மைல்கல் கடந்துள்ளது.


டாடா நெக்சான் மாடல் கார் உற்பத்தியில் 1,50,000 யூனிட்களை கடந்துள்ளது. இந்த யூனிட் டாடா மோட்டார்ஸ் பூனே உற்பத்தி ஆலையில் இருந்து வெளியிடப்பட்டது. 

காம்பேக்ட் எஸ்யுவி மாடல் 2018 செப்டம்பர் வாக்கில் உற்பத்தியில் 50 ஆயிரம் யூனிட்களை கடந்தது. பின் கடந்த ஆண்டு செப்டம்பரில்  ஒரு லட்சம் யூனிட்களை கடந்தது. அந்த வரிசையில், புதிய மைல்கல் பற்றிய விவரம் வெளியாகி உள்ளது. 



அக்டோபர் 2020 வாக்கில் டாடா நெக்சான் அதிக விற்பனையை பதிவு செய்தது. 2018 ஆண்டு வாக்கில் குளோபல் என்கேப் சோதனையில் ஐந்து நட்சத்திர புள்ளிகளை பெற்ற முதல் இந்திய கார் என்ற பெருமையை டாடா நெக்சான் பெற்றது. 

இதைத் தொடர்ந்து  டாடா நிறுவனத்தின் அல்ட்ரோஸ், டியாகோ மற்றும் டிகோர் போன்ற மாடல்கள் அதிக பாதுகாப்பான மாடல் என்ற பெருமையுடன் வெளியாகி இருக்கின்றன. 
Tags:    

Similar News