ஆட்டோமொபைல்
மாருதி செலரியோ

புதிய கார் வெளியீடு திட்டத்தில் திடீர் மாற்றம் செய்த மாருதி சுசுகி

Published On 2020-10-19 09:41 GMT   |   Update On 2020-10-19 09:41 GMT
புதிய கார் வெளியீடு திட்டத்தில் மாருதி சுசுகி நிறுவனம் திடீர் மாற்றத்தை செய்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.


மாருதி சுசுகி நிறுவனம் தனது அடுத்த தலைமுறை செலரியோ ஹேட்ச்பேக் மாடலின் இந்திய வெளியீடு திட்டத்தில் திடீர் மாற்றத்தை செய்து இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.  

புதிய தலைமுறை செலரியோ மாடல் இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை காலக்கட்டத்தில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்டது. எனினும், தற்சமயம் வெளியாகி உள்ள தகவல்களின் படி செலரியோ மாடல் வெளியீடு 2021 ஆண்டு துவக்கத்தில் நடைபெறும் என தெரிகிறது.



உதிரிபாகங்கள் கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டதே இதன் வெளியீடு தாமதமாக முக்கிய காரணமாக கூறப்படுகிறது. செலரியோ மாடல் அதிக மாற்றங்கள் செய்யப்படுவதால், இதன் வெளியீடு அதிகம் எதிர்பார்க்கப்படுகிறது. 

அந்த வகையில், செலரியோ மாடல் முற்றிலும் புதிய வடிவமைப்பு, மேம்பட்ட இன்டீரியர்கள் மற்றும் புதிய அம்சம், உபகரணங்கள் வழங்கப்படும் என தெரிகிறது. இந்த கார் மாருதி சுசுகி நிறுவனத்தின் ஹார்டெக்ட் பிளாட்ஃபார்மில் உருவாகி வருகிறது. 

மாருதியின் வேகன்ஆர் மாடலும் இதே பிளாட்ஃபார்மிலேயே உருவாகி இருக்கிறது. புதிய தலைமுறை செலரியோ மாடலில் ஸ்மார்ட்பிளே ஸ்டூடியோ இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் வழங்கப்படுகிறது. புதிய செலரியோ மாடலில் 1.0 லிட்டர் பெட்ரோல் யூனிட் மற்றும் 1.2 லிட்டர் பெட்ரோல் என இருவித என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கும் என கூறப்படுகிறது. 
Tags:    

Similar News