ஆட்டோமொபைல்
ஹைட்ரஜன் பியூவல் செல் கார்

ஹைட்ரஜன் பியூவல் செல் கொண்டு இயங்கும் முதல் இந்திய கார் இது தான்

Published On 2020-10-14 09:42 GMT   |   Update On 2020-10-14 09:42 GMT
ஹைட்ரஜன் பியூவல் செல் கொண்டு இயங்கும் இந்தியாவின் முதல் கார் சோதனை பற்றி தொடர்ந்து பார்ப்போம்.


இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் பியூவல் செல் கொண்டு இயங்கும் கார் வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது. இந்த ப்ரோடோடைப் கார் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட பியூவல் செல் ஸ்டேக்குடன் பூனேவில் உள்ள தேசிய வேதியியல் ஆய்வகத்தில் சோதனை செய்யப்பட்டது.

பியூவல் செல் என்பது குறைந்த வெப்பநிலை அதாவது 65 முதல் 75 டிகிரி சென்டிகிரேடில் இயங்குகிறது. இது வாகன இயக்கத்திற்கு ஏற்றது. ஆய்வுகளில் மஹிந்திரா இ வெரிட்டோ எலெக்ட்ரிக் செடான் மாடலில் புதிதாக உருவாக்கப்பட்ட பியூவல் செல் பயன்படுத்தப்பட்டது.



மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஆய்வு மையம் (CSIR) மற்றும் கேபிஐடி இணைந்து 10 கிலோவாட் ஆட்டோமோட்டிவ் கிரேடு எல்டி-பிஇஎம்எப்சி பியூவல் செல் ஸ்டேக்கை உருவாக்கி இருக்கின்றன. இந்த பியூவல் செல் ஸ்டேக் தொழில்நுட்பத்தில் குறைந்த எடை கொண்ட மெட்டல் பை-போலார் பிளேட் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. 

பியூவல் செல்களினுள் ஏற்படும் இரசாயண மாற்றம் மின்சக்தியை உற்பத்தி செய்யும். பின் அது எலெக்ட்ரிக் மோட்டார்களுக்கு சக்தியூட்டும். இவ்வாறே பியூவல் செல் கொண்ட கார்கள் இயக்கப்படுகின்றன.
Tags:    

Similar News