ஆட்டோமொபைல்
ஆடி கியூ2

இந்தியாவில் ஆடி புது மாடல் கார் முன்பதிவு துவக்கம்

Published On 2020-10-05 10:40 GMT   |   Update On 2020-10-05 10:40 GMT
ஆடி நிறுவனத்தின் புது மாடல் காருக்கான முன்பதிவு இந்தியாவில் துவங்கப்பட்டு இருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.


ஆடி இந்தியா நிறுவனம் தனது கியூ2 எஸ்யுவி மாடலுக்கான டீசரை செப்டம்பர் மாத வாக்கில் வெளியிட்டது. அந்த வரிசையில், தற்சமயம் புது மாடலுக்கான முன்பதிவு துவங்கப்பட்டு இருக்கிறது. புதிய கியூ2 மாடலுக்கான முன்பதிவு கட்டணம் ரூ. 2 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

பயனர்கள் புதிய கார் முன்பதிவை ஆடி அதிகாரப்பூர்வ விற்பனை மையம் அல்லது வலைதளத்தில் மேற்கொள்ள முடியும். புதிய கியூ2 மாடல் 2020 ஆண்டில் ஆடி வெளியிடும் ஐந்தாவது கார் ஆகும். 



கியூ2 மாடல் எம்க்யூபி பளாட்பார்மில் உருவாகி இருக்கிறது. இதே பிளாட்பார்ம் ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் டி ராக் மாடலிலும் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. அளவில் இந்த கார் 4191எம்எம் நீளம், 1794எம்எம் அகலம், 1508எம்எம் உயரமாக இருக்கிறது. இதன் வீல்பேஸ் 2601எம்எம் ஆக இருக்கிறது.

ஆடி கியூ2 மாடலில் 2.0 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 188 பிஹெச்பி பவர், 320 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 7 ஸ்பீடு டூயல் கிளட்ச் ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது.

இத்துடன் புதிய மாடலில் சிங்கில் பிரேம் கிரில், எல்இடி ஹெட்லேம்ப்கள், சில்வர் ஸ்கிட் பிளேட்கள், பிளாக் பாடி கிளாடிங், பிளாக்டு அவுட் பி பில்லர், ஷார்க் பின் ஆன்டெனா, எல்இடி டெயில் லைட்கள் மற்றும் டூயல் டிப் எக்சாஸ்ட்கள் வழங்கப்படுகின்றன.

Tags:    

Similar News