ஆட்டோமொபைல்
ரெனால்ட் கைகர்

ரெனால்ட் கைகர் இந்திய வெளியீடு திட்டத்தில் திடீர் மாற்றம்

Published On 2020-09-30 11:19 GMT   |   Update On 2020-09-30 11:19 GMT
ரெனால்ட் நிறுவனத்தின் புதிய கைகர் மாடல் இந்திய வெளியீடு திட்டத்தில் திடீர் மாற்றம் செய்யப்பட்டு இருக்கிறது.


ரெனால்ட் நிறுவனம் தனது கைகர் மாடல் காரை இந்தியாவில் அடுத்த ஆண்டு அறிமுகம் செய்ய இருக்கிறது. இது காம்பேக்ட் எஸ்யுவி பிரிவில் நிலைநிறுத்தப்படுகிறது. முந்தைய தகவல்களின்படி ரெனால்ட் கைகர் இந்த ஆண்டு அறிமுகமாக இருப்பதாக கூறப்பட்டது.

இந்நிலையில், தற்சமயம் வெளியாகி இருக்கும் தகவல்களில் ரெனால்ட் கைகர் வெளியீடு தாமதமாகும் என கூறப்பட்டு உள்ளது. தற்போதைய கொரோனாவைரஸ் பாதிப்பு காரணமாக ஏற்பட்ட விநியோக இடையூறுகளால் இதன் வெளியீடு தாமதமாகி இருக்கலாம் என கூறப்படுகிறது. 



வெளியீட்டிற்கு முன் புதிய கைகர் மாடல் ஸ்பை படங்கள் இணையத்தில் லீக் ஆகி இருக்கிறது. அதன்படி புதிய காரின் வெளிப்புறம் கிளாம்ஷெல் பொனெட், பெரிய வீல் ஆர்ச்கள், குறைந்த உயரம் கொண்டிருக்கிறது. இத்துடன் இரண்டடுக்கு ஹெட்லேம்ப் செட்டப் மற்றும் மூன்று ப்ரோஜக்டர் ஹெட்லைட்கள் வழங்கப்பட இருப்பது தெரியவந்தது.

காரின் உள்புறம் ரெனால்ட் டிரைபர் மாடலை தழுவி உருவாக்கப்பட்டு இருக்கும் என்றும் இதில் சில உயர்ரக பொருட்கள் மற்றும் அம்சங்கள் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது.

புதிய ரெனால்ட் கைகர் மாடலில் 1.0 லிட்டர் மூன்று சிலிண்டர் பெட்ரோல் மோட்டார் வழங்கப்படுகிறது. இத்துடன் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது. எதிர்காலத்தில் இந்த மாடல் ஏஎம்டி மற்றும் சிவிடி போன்ற அம்சங்களை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Tags:    

Similar News