ஆட்டோமொபைல்
ஏத்தர் 450எக்ஸ் கலெக்டர்ஸ் எடிஷன்

ஏத்தர் 450எக்ஸ் ஸ்பெஷல் எடிஷன் அறிமுகம்

Published On 2020-09-26 10:33 GMT   |   Update On 2020-09-26 10:33 GMT
ஏத்தர் எனர்ஜி நிறுவனம் இந்திய சந்தையில் 450எக்ஸ் ஸ்பெஷல் எடிஷன் இ ஸ்கூட்டரை அறிமுகம் செய்து உள்ளது.


ஏத்தர் எனர்ஜி நிறுவனம் இந்தியாவில் 450எக்ஸ் கலெக்டர்ஸ் எடிஷன் மாடலை சீரிஸ் 1 எனும் பெயரில் அறிமுகம் செய்து உள்ளது. புதிய ஸ்பெஷல் எடிஷன் மாடல் 2020, ஜனவரி 28 ஆம் தேதிக்குள் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை முன்பதிவு செய்தவர்களுக்கானது ஆகும். 

அந்த வகையில் ஸ்கூட்டர் பற்றி எந்த விவரமும் தெரியாத நிலையில், இதனை வாங்க முன்பதிவு செய்தவர்கள் இந்த மாடலை தேர்வு செய்து கொள்ளலாம். இந்தியாவில் ஏற்கனவே அறிமுகமாக இருந்த நிலையில், இதன் அறிமுக நிகழ்வு கொரோனாவைரஸ் பாதிப்பு காரணமாக தள்ளிப்போனது.



புதிய ஏத்தர் இ-ஸ்கூட்டர் விரைவில் விற்பனைக்கு வர இருக்கிறது. புதிய கலெக்டர்ஸ் எடிஷன் ஸ்டான்டர்டு மாடலுடன் ஒப்பிடும் போது பல்வேறு கூடுதல் அம்சங்களை கொண்டிருக்கிறது. அதன்படி இதில் டின்ட் செய்யப்பட்ட டிரான்ஸ்லூசென்ட் பாடி பேனல்கள் வழங்கப்படுகின்றன.

இவை ஏத்தர் ஸ்கூட்டரின் தனித்துவம் மிக்க அலுமினியம் சேசிஸ் மற்றும் எலெக்ட்ரிக் டிரெலிஸ் பிரேமை வெளியில் இருந்து பார்க்கும் படி வடிவமைக்கப்பட்டு உள்ளது. மேலும் இந்த ஸ்கூட்டர் ஹை கிளாஸ் மெட்டாலிக் பிளாக் பெயின்ட் செய்யப்பட்டு உள்ளது.

ஏத்தர் 450 ஸ்கூட்டரில் 2.9 கிலோவாட் லித்தியம் அயான் பேட்டரி பொருத்தப்பட்டு இருக்கிறது. இது 8 பிஹெச்பி பவர், 26 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. மேலும் இந்த ஸ்கூட்டர் ஈக்கோ, ரைடு, ஸ்போர்ட் மற்றும் வார்ப் ஆகிய ரைடிங் மோட்களை  கொண்டிருக்கிறது.
Tags:    

Similar News