ஆட்டோமொபைல்
மசராட்டி எம்சி20

மசராட்டி எம்சி20 சூப்பர்கார் அறிமுகம்

Published On 2020-09-10 10:34 GMT   |   Update On 2020-09-10 10:34 GMT
மசராட்டி எம்சி20 சூப்பர்கார் மாடல் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.

இத்தாலி நாட்டு ஆடம்பர கார் தயாரிப்பாளரான மசராட்டி சர்வதேச சந்தையில் எம்சி20 சூப்பர்கார் மாடலை அறிமுகம் செய்துள்ளது. புதிய மசராட்டி எம்சி20 - மசராட்டி கோர்ஸ் 2020 என்ற விரிவாக்கம் கொண்டுள்ளது. இது மசராட்டி புது தலைமுறையில் களமிறங்குவதை குறிக்கிறது.

புதிய எம்சி20 வடிவமைப்பு எம்சி12 மாடலை தழுவி மேற்கொள்ளப்பட்டு உள்ளது. எம்சி20 மாடலில் புதிய வி6 என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் நியூடெனோ என அழைக்கப்படுகிறது. இது மொடெனாவில் உள்ள மசராட்டி மூலம் உருவாக்கப்பட்டது ஆகும்.



புதிய என்ஜின் காப்புரிமை பெறப்பட்ட எஃப்1 தொழில்நுட்பத்தை பயன்படுத்துகிறது. இதில் பிரீ-கம்பஷன் சேம்பர் வழங்கப்பட்டு இருக்கிறது. 3.0 லிட்டர் என்ஜின் 622 பிஹெச்பி பவர், 730 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 8 ஸ்பீடு டிசிடி டிரான்ஸ்மிஷன் வழங்கப்பட்டு உள்ளது.

இந்த சூப்பர்கார் மணிக்கு 0 முதல் 100 கிலோமீட்டர் வேகத்தை வெறும் 2.9 நொடிகளில் எட்டிவிடும் திறன் கொண்டுள்ளது. மேலும் இது மணிக்கு 325 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும்.
Tags:    

Similar News