ஆட்டோமொபைல்
மெர்சிடிஸ் பென்ஸ் இக்யூசி

மெர்சிடிஸ் பென்ஸ் இக்யூசி விவரங்கள் வெளியீடு

Published On 2020-09-07 08:37 GMT   |   Update On 2020-09-07 08:37 GMT
மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் புதிய இக்யூசி மாடல் விவரங்கள் வெளியிடப்பட்டு இருக்கின்றன.


மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் தனது முதல் எலெக்ட்ரிக் வாகனத்தை விரைவில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய இருக்கிறது. புதிய எலெக்ட்ரிக் கார் இக்யூசி எனும் பெயரில் அறிமுகமாகிறது. இந்தியாவில் இது மெர்சிடிஸ் நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் மாடல் ஆகும்.

இது ஜிஎல்சி கிராஸ்ஓவர் மாடலை தழுவி உருவாகி இருக்கிறது. புதிய இக்யூசி மாடலில் 400 4மேடிக், 2 எலெக்ட்ரிக் மோட்டார்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன. இவை 400 பிஹெச்பி பவர், 760 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இது மணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தை 5.1 நொடிகளில் எட்டிவிடும் திறன் கொண்டுள்ளது.



மேலும் இந்த கார் ஒருமுறை சார்ஜ் செய்தால் அதிகபட்சம் 471 கிலோமீட்டர் வரை செல்லும். மெர்சிடிஸ் பென்ஸ் இக்யூசி மாடல் 7.4 கிலோவாட் ஹோம் எலெக்ட்ரிக் கனெக்ஷன், 7.4 கிலோவாட் ஏசி வால் பாக்ஸ் மற்றும் 110 கிலோவாட் டிசி ஃபாஸ்ட் சார்ஜர் என மூன்றுவித ஆப்ஷன்களில் கிடைக்கிறது.

மெர்சிடிஸ் பென்ஸ் இக்யூசி மாடலில் மல்டி-பீம் எல்இடி ஹெட்லேம்ப்கள், எல்இடி டெயில் லைட்கள், புதிய அலாய் வீல்கள், ஏசி வென்ட்கள், டூயல் ஸ்கிரீன் சிஸ்டம் போன்ற அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன.
Tags:    

Similar News