ஆட்டோமொபைல்
ஹோண்டா ஜாஸ்

விற்பனையகம் வந்தடைந்த 2020 ஹோண்டா ஜாஸ்

Published On 2020-08-24 11:18 GMT   |   Update On 2020-08-24 11:18 GMT
ஹோண்டா நிறுவனத்தின் 2020 ஜாஸ் மாடல் கார் விற்பனையகம் வந்தடைந்து இருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.

ஹோண்டா நிறுவனம் விரைவில் 2020 ஜாஸ் மாடல் காரை இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய இருக்கிறது. வரும் வாரங்களில் இதன் விற்பனை துவங்க இருக்கும் நிலையில், இதற்கான முன்பதிவு நடைபெற்று வருகிறது. புதிய 2020 ஜாஸ் மாடலுக்கான முன்பதிவு கட்டணம் ரூ. 21 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. 

இந்நிலையில், புதிய ஜாஸ் மாடல் விற்பனையகம் ஒன்றில் நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கும் வீடியோ யூடியூபில் பதிவேற்றம் செய்யப்பட்டு இருக்கிறது. வீடியோவில் இருப்பது டாப் எண்ட் இசட்எக்ஸ் ட்ரிம் ஆகும். முன்னதாக இந்த கார் பெட்ரோல் வெர்ஷன் மட்டுமே விற்பனை செய்யப்படும் என ஹோண்டா அறிவித்து இருந்தது. 



ஹோண்டா பிஎஸ்6 ஜாஸ் மாடலில் 1.2 லிட்டர் ஐ-விடிஇசி யூனிட் வழங்கப்பட இருக்கிறது. இந்த என்ஜின் 89 பிஹெச்பி பவர் மற்றும் 110 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 5 ஸ்பீடு மேனுவல் அல்லது சிவிடி டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது. 

புதிய ஹோண்டா காரில் எல்இடி ஹெட்லேம்ப் மற்றும் டெயில் லேம்ப்கள், சன்ரூஃப், குரூயிஸ் கண்ட்ரோல், பட்டன் ஸ்டார்ட், பேடில் ஷிஃப்டர்கள் வழங்கப்பட இருக்கிறது. 

இந்திய சந்தையில் புதிய ஹோண்டா ஜாஸ் பிஎஸ்6 மாடல் மாருதி பலேனோ, ஹூண்டாய் எலைட் ஐ20 மற்றும் டாடா அல்ட்ரோஸ் போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது.
Tags:    

Similar News