ஆட்டோமொபைல்
ஆடி ஆர்எஸ் கியூ8

ஆடி ஆர்எஸ் கியூ8 இந்திய வெளியீட்டு தேதி அறிவிப்பு

Published On 2020-08-21 09:34 GMT   |   Update On 2020-08-21 09:34 GMT
ஆடி நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் ஆர்எஸ் கியூ8 மாடல் காரின் இந்திய வெளியீட்டு தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

ஆடி நிறுவனம் தனது புதிய ஆர்எஸ் கியூ8 மாடல் காரை இந்திய சந்தையில் ஆகஸ்ட் 27 ஆம் தேதி அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்த காருக்கான முன்பதிவு ஏற்கனவே துவங்கி நடைபெற்று வருகிறது. முன்பதிவு கட்டணம் ரூ. 15 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

புதிய கார் முன்பதிவை வாடிக்கையாளர்கள் ஆடி அதிகாரப்பூர்வ வலைதளம் அல்லது விற்பனையகம் சென்று முன்பதிவு செய்து கொள்ளலாம் என ஆடி நிறுவனம் அறிவித்து இருக்கிறது. புதிய ஆர்எஸ் கியூ8 மாடல் இதே ஆண்டு ஆடி அறிமுகம் செய்யும் நான்காவது வாகனம் ஆகும். 



ஆடி ஆர்எஸ் கியூ8 மாடலில் 4.0 லிட்டர் ட்வின் டர்போ வி8 என்ஜின் வழங்கப்பட்டு உள்ளது. இந்த என்ஜின் 600 பிஹெச்பி பவர், 800 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 8 ஸ்பீடு ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது. இத்துடன் குவாட்ரோ ஆல் வீல் டிரைவ் சிஸ்டம் வழங்கப்படுகிறது. 

புதிய ஆடி கார் மணிக்கு 0 முதல் 100 கிலோமீட்டர் வேகத்தை வெறும் 3.8 நொடிகளில் எட்டிவிடும் திறன் கொண்டிருக்கிறது. காரின் வெளிப்புறத்தில் பிரம்மாண்ட தோற்றம், ஒற்றை ஃபிரேம் கிரில், மேம்பட்ட முன்புற மற்றும் பின்புற பம்ப்பர்கள் வழங்கப்படுகிறது. இத்துடன் 22 இன்ச் அலாய் வீல்கள் மற்றும் 23 இன்ச் யூனிட்கள் ஆப்ஷனாக வழங்கப்படுகிறது.
Tags:    

Similar News