ஆட்டோமொபைல்
போர்ஷ் பனமெரா

பந்தய களத்தில் புதிய சாதனை படைத்த போர்ஷ் பனமெரா

Published On 2020-08-18 08:23 GMT   |   Update On 2020-08-18 08:23 GMT
போர்ஷ் நிறுவனத்தின் புதிய பனமெரா கார் மாடல் நர்பர்கிரிங் பந்தய களத்தில் புதிய சாதனை படைத்து இருக்கிறது.
 

போர்ஷ் நிறுவனம் தனது புதிய பனமெரா காரை நர்பர்கிரிங் களத்திற்கு கொண்டு சென்று புதிய சாதனை படைத்து இருக்கிறது. ஜெர்மனி நாட்டு பந்திய களத்தில் பனமெரா மாடல் 20.832 கிலோமீட்டர் தூரத்தை வெறும் 7:29.81 நிமிடங்களில் கடந்து உள்ளது. இதன் மூலம் எக்சிக்யூட்டிவ் கார்கள் பிரிவில் புதிய சாதனையை புரிந்துள்ளது.

பந்திய களத்தில் இந்த சாதனையை எட்ட போர்ஷ் பயன்படுத்திய பவர்டிரெயின் விவரங்கள் இதுவரை ரகசியமாகவே வைக்கப்பட்டு இருக்கின்றன. இது 2016 ஆம் ஆண்டு பனமெரா டர்போ மாடலை விட 13 நொடிகள் முன்கூட்டியே களத்தை நிறைவு செய்து இருக்கிறது.



இந்த சாதனையின் போது புதிய போர்ஷ் பனமெராவை போர்ஷ் நிறுவனத்தின் பாரம்பரிய டெஸ்ட் டிரைவர் லார்ஸ் கெர்ன் ஓட்டினார். இந்த வேகம் மெர்சிடிஸ் ஏஎம்ஜி ஜிடி 63 எஸ் மாடலையும் முந்தியுள்ளது. மெர்சிடிஸ் மாடல் இந்த களத்தை 7:30.11 நிமிடங்களில் கடந்து இருந்தது.  

புதிய பனமெரா மாடல் பற்றிய அதிகாரப்பூர்வ விவரங்கள் ஆகஸ்ட் 26 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. புதிய மேம்பட்ட வெர்ஷன் முந்தைய மாடலை விட அதிக மாற்றங்களை கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றன.
Tags:    

Similar News