ஆட்டோமொபைல்
ஹூண்டாய் ஐயோனிக்

எலெக்ட்ரிக் வாகனங்களுக்கென புதிய சப்-பிராண்டு துவங்கிய ஹூண்டாய்

Published On 2020-08-11 09:53 GMT   |   Update On 2020-08-11 09:53 GMT
ஹூண்டாய் நிறுவனம் எலெக்ட்ரிக் வாகன சந்தைக்கென பிரத்யேக சப்-பிராண்டு ஒன்றை துவங்கி உள்ளது.


ஹூண்டாய் நிறுவனம் ஐயோனிக் எனும் சப்-பிராண்டை அறிமுகம் செய்துள்ளது. இது எலெக்ட்ரிக் வாகனங்களுக்கென பிரத்யேகமாக துவங்கப்பட்டு உள்ளதாக ஹூண்டாய் தெரிவித்து இருக்கிறது.

ஏற்கனவே ஹூண்டாய் நிறுவனத்தின் ஐயோனிக் பெயர் கொண்ட கார் சர்வதேச சந்தையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஐயோனிக் செடான் மாடல் ஹைப்ரிட், பிளக்-இன் ஹைப்ரிட் மற்றும் முழுமையான எலெக்ட்ரிக் போன்ற வேரியண்ட்களில் விற்பனை செய்யப்படுகிறது. 



ஐயோனிக் பிராண்டிங்கில் அறிமுகமாகும் புதிய வாகனங்கள் எண் அடிப்படையில் பெயரிடப்படும் என ஹூண்டாய் தெரிவித்து உள்ளது. ஒற்றைப்படை எண்கள் எஸ்யுவி மாடல்களுக்கும், இரட்டைப்படை எண்கள் செடான் மற்றும் இதர மாடல்களுக்கு சூட்டப்பட இருக்கிறது.

புதிய ஐயோனிக் பிராண்டிங் கொண்ட முதல் மாடல் 2021 ஐயோனிக் 5 எஸ்யுவி என கூறப்படுகிறது. இது கடந்த ஆண்டு ஃபிரான்க் புரூட் மோட்டார் விழாவில் அறிமுகம் செய்யப்பட்ட ஹூண்டாய் 45 கான்செப்ட் மாடலை தழுவி உருவாக்கப்பட்டு வருகிறது.
Tags:    

Similar News