ஆட்டோமொபைல்
எவோக் 6061

ஒருமுறை சார்ஜ் செய்தால் 500 கிலோமீட்டர் செல்லும் எலெக்ட்ரிக் பைக்

Published On 2020-08-08 09:32 GMT   |   Update On 2020-08-08 09:32 GMT
எவோக் மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனத்தின் புதிய எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் ஒருமுறை சார்ஜ் செய்தால் 500 கிலோமீட்டர் வரை செல்லும் திறன் கொண்டிருக்கிறது.


பீஜிங்கை தலைமையிடமாக கொண்டு இயங்கும் எவோக் மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனம் 6061 எலெக்ட்ரிக் குரூயிசர் மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்து உள்ளது. இந்த மோட்டார்சைக்கிள் பிரம்மாண்ட பேட்டரி பேக் மற்றும் தலைசிறந்த ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்டிருக்கின்றன.

இதல் உள்ள 120 கிலோவாட் மோட்டார் மணிக்கு அதிகபட்சம் 230 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டிருக்கிறது. இதில் உள்ள பேட்டரி 0 முதல் 80 சதவீதம் வரை சார்ஜ் செய்ய 15 நிமிடங்களே ஆகும். இதற்கு மோட்டார்சைக்கிளை டிசி ஃபாஸ்ட் சார்ஜிங் பயன்படுத்துவது அவசியம் ஆகும்.



எவோக் 6061 மாடலில் வட்ட வடிவத்தில் எல்இடி ஹெட்லேம்ப், மஸ்குலர் தோற்றம் கொண்டிருக்கிறது. இதன் டெயில் பகுதியை பார்க்க டுகாட்டி டையவெல் போன்று காட்சியளிக்கிறது. இந்த மோட்டார்சைக்கிளில் 24.8kWh லிக்விட் கூல்டு பேட்டரி வழங்கப்பட்டு இருக்கிறது.

சிட்டி மோடில் ஓட்டும் போது இந்த மோட்டார்சைக்கிள் 470 கிலோமீட்டர் வரை செல்லும். நெடுஞ்சாலைகளில் செல்லும் போது 265 கிலோமீட்டர் வரை செல்லும் திறன் கொண்டுள்ளது. 

புதிய எவோக் 6061 விரைவில் அமெரிக்க சந்தையில் விற்பனை செய்யப்பட இருக்கிறது. இதன் விலை 24995 டாலர்கள் இந்திய மதிப்பில் ரூ. 18.73 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது.
Tags:    

Similar News