ஆட்டோமொபைல்
ரெனால்ட் கேப்டூர்

இந்தியாவில் புதிய மாடல்களை வெளியிட திட்டமிடும் ரெனால்ட்

Published On 2020-08-03 11:35 GMT   |   Update On 2020-08-03 11:35 GMT
ரெனால்ட் நிறுவனம் இந்திய சந்தையில் புதிய கார் மாடல்களை வெளியிட திட்டமிட்டு உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.


பிரெஞ்சு நாட்டின் ஆட்டோ உற்பத்தியாளரான ரெனால்ட் இந்திய சந்தையின் ஊரக பகுதி விற்பனையில் அதிக கவனம் செலுத்த இருப்பதாக தெரிவித்து உள்ளது. இதன் மூலம் நாட்டில் தனது இடத்தை பலப்படுத்த ரெனால்ட் திட்டமிட்டு இருக்கிறது.

சமீபத்தில் ரெனால்ட் நிறுவனம் தனது டிரைபர் மற்றும் க்விட் மாடல்களின் ஏஎம்டி ட்ரிம்களை அறிமுகம் செய்தது. மேலும் இந்தியாவில் புதிய கார்களை வெளியிட திட்டமிட்டு உள்ளதாக அந்நிறுவனம் அறிவித்து உள்ளது. 



விரைவில் புதிய டஸ்டர் மாடலை புதிய டர்போ என்ஜினுடன் அறிமுகம் செய்ய இருக்கிறோம். இது இந்த பிரிவில் மிகவும் சக்திவாய்ந்த எஸ்யுவியாக இருக்கும் என ரெனால்ட் இந்தியா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் நிர்வாக இயக்குனர் வெங்கட்ராம் மமிலாபேல் தெரிவித்தார்.

எங்களது வழக்கமான கொள்கைக்கு உண்மையாக இருக்கும் நோக்கில், ரெனால்ட் வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்வதில் தலைசிறந்த மாடல்களை அறிமுகம் செய்யும் என அவர் மேலும் தெரிவித்தார்.
Tags:    

Similar News