ஆட்டோமொபைல்
டொயோட்டா லேண்ட் குரூயிசர்

மீண்டும் இந்தியா வரும் டொயோட்டா லேண்ட் குரூயிசர்

Published On 2020-07-25 11:43 GMT   |   Update On 2020-07-25 11:43 GMT
டொயோட்டா நிறுவனத்தின் புதிய லேண்ட் குரூயிசர் மாடல் மீண்டும் இந்திய சந்தையில் அறிமுகமாக இருக்கிறது.
 

டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் நிறுவனம் தனது பாரம்பரிய மாடல்களில் ஒன்றாக விளங்கிய லேண்ட் குரூயிசர் மாடல் விற்பனையை இந்திய சந்தையில் நிறுத்தியது. லேண்ட் குரூயிசர் பிராடோ மற்றும் ஃபிளாக்ஷிப் லேண்ட் குரூயிசர் என இரண்டு வேரியண்ட்களில் இந்த எஸ்யுவி விற்பனை செய்யப்பட்டு வந்தது.

இரு மாடல்களும் உலகின் தலைசிறந்த ஆஃப் ரோடர் மாடல்களில் ஒன்றாக விளங்கின. தற்சமயம் இரு மாடல்களும் இந்திய சந்தையில் மீண்டும் அறிமுகமாகும் என டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார்ஸ் நிறுவனத்தின் விற்பனை மற்றும் சர்வீஸ் பிரிவு மூத்த துணை தலைவர் நவீன் சோனி தனியார் நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார். 



இந்த மாடலை கைவிட மாட்டோம் என்றும், இந்த மாடல் ஏதேனும் வடிவம், விதம் அல்லது அளவில் மீண்டும் அறிமுகமாகும் என அவர் மேலும் தெரிவித்தார். டொயோட்டா லேண்ட் குரூயிசர் மாடல் உலக சந்தையின் ஃபிளாக்ஷிப் எஸ்யுவி பிரிவில் 33 சதவீத பங்குகளை வைத்திருந்தது.

அந்த வகையில் டொயோட்டா நிறுவனம் தனது லேண்ட் குரூயிசர் எஸ்யுவி மாடலின் ஃபேஸ்லிப்ட் வெர்ஷனை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டு வருவது தெரியவந்துள்ளது. இந்த மாடல் சர்வதேச சந்தையில் இந்த ஆண்டு இறுதியில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Tags:    

Similar News