ஆட்டோமொபைல்
ஹூண்டாய் வென்யூ ஸ்போர்ட்

ஹூண்டாய் வென்யூ புது வேரியண்ட்கள் இந்திய சந்தையில் அறிமுகம்

Published On 2020-07-22 09:55 GMT   |   Update On 2020-07-22 09:55 GMT
ஹூண்டாய் இந்தியா நிறுவனம் தனது வென்யூ மாடல் காரின் புது வேரியண்ட்களை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து உள்ளது.
 

ஹூண்டாய் நிறுவனம் தனது வென்யூ காம்பேக்ட் எஸ்யுவி மாடலின் ஐஎம்டி மற்றும் ஸ்போர்ட் ட்ரிம் வேரியண்ட்களை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து இருக்கிறது. 

புதிய ஹூண்டாய்  வென்யூ மாடல்கள் துவக்க விலை ரூ. 9.99 லட்சத்தில் துவங்கி டாப் எண்ட் ஸ்போர்ட் ட்ரிம் மாடல் விலை ரூ. 11.58 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ் ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. 

ஹூண்டாய் வென்யூ ஐஎம்டி வேரியண்ட்டில் 1.0 லிட்டர் டி ஜிடிஐ பெட்ரோல் என்ஜின் ஆப்ஷனில் கிடைக்கிறது. ஹூண்டாய் வென்யூ ஐஎம்டி எஸ்எக்ஸ் மற்றும் எஸ்எக்ஸ் ஒ என இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது. இவற்றின் விலை முறையே ரூ. 9.99 லட்சம் மற்றும் ரூ. 11.08 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ் ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. 



புதிய ஐஎம்டி மாடலில் எலெக்ட்ரோ மெக்கானிக்கல் கிளட்ச் வழங்கப்பட்டுள்ளது. இது கிளட்ச் பெடல் இல்லாத முதல் மேனுவல் டிரான்ஸ்மிஷன் கார் ஆகும். இந்த டிரான்ஸ்மிஷனுடன் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் வழங்கப்படுகிறது. புதிய பிஎஸ்6 ரக என்ஜின் 120 பிஹெச்பி பவர், 170 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது.

ஹூண்டாய் வென்யூ ஸ்போர்ட் ட்ரிம் எஸ்எக்ஸ், எஸ்எக்ஸ் பிளஸ் மற்றும் எஸ்எக்ஸ் ஒ என மூன்று வேரியண்ட்களில் கிடைக்கிறது. இதில் எஸ்எக்ஸ் மற்றும் எஸ்எக்ஸ் ஒ வேரியண்ட்களில் பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின் ஆப்ஷன்கள் வழங்கப்பட்டு உள்ளன. இவை 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் யூனிட் ஆகும். 

வென்யூ ஸ்போர்ட் ட்ரிம் எஸ்எக்ஸ் பிளஸ் வேரியண்ட் டர்போ பெட்ரோல் என்ஜின் எனும் ஒற்றை ஆப்ஷனில் கிடைக்கிறது. இத்துடன் 7 ஸ்பீடு டிசிடி ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது.
Tags:    

Similar News