ஆட்டோமொபைல்
போர்ஷ் 911

580ஹெச்பி திறன் கொண்ட போர்ஷ் 911 அறிமுகம்

Published On 2020-07-18 10:03 GMT   |   Update On 2020-07-18 10:03 GMT
போர்ஷ் நிறுவனம் 992 ஜெனரேஷன் 911 டர்போ மாடல் காரை அறிமுகம் செய்து இருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.


போர்ஷ் நிறுவனம் புதிய 992 ஜெனரேஷன் 911 டர்போ மாடலை கூப் மற்றும் கேப்ரியோலெட் என இரண்டு வெர்ஷன்களில் அறிமுகம் செய்து இருக்கிறது. இந்த மாடல் 450 ஹெச்பி திறன் வழங்கும் கரெரா 4எஸ் மற்றும் 650 ஹெச்பி டர்போ எஸ் மாடல்களுக்கு இடையே நிலைநிறுத்தப்படுகிறது.

புதிய 911 டர்போ மாடலில் 580 ஹெச்பி திறன், 750 என்எம் டார்க் செயல்திறன் வழங்கும் 3.7 லிட்டர் ஃபிளாட் சிக்ஸ் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இது மணிக்கு 0 முதல் 100 கிலோமீட்டர் வேகத்தை 2.8 நொடிகளில் எட்டிவிடும் திறன் கொண்டிருக்கிறது. மேலும் இது மணிக்கு அதிகபட்சம் 320 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும்.



இந்த என்ஜினுடன் 8 ஸ்பீடு பிடிகே டூயல் கிளட்ச் ஆட்டோ கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது. இத்துடன் போர்ஷ் டிராக்ஷன் மேனேஜ்மென்ட் ஆக்டிவ் 4 வீல் டிரைவ் சிஸ்டம் வழங்கப்பட்டுள்ளது. இது முந்தைய மாடலை விட அதிக செயல்திறன் வழங்க வழி செய்கிறது. 

இந்தியாவில் போர்ஷ் 911 மாடல் கரெரா மற்றும் கரெரா எஸ் வெர்ஷன்களில் கிடைக்கிறது. இவற்றின் விலை முறையே ரூ. 1.82 கோடி மற்றும் ரூ. 1.99 கோடி என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. புதிய டாப் ரேன்ஜ் போர்ஷ் 911 டர்போ எஸ் மாடல் விலை ரூ. 3.08 கோடி என நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது.
Tags:    

Similar News