ஆட்டோமொபைல்
ஹூண்டாய் டக்சன் ஃபேஸ்லிப்ட்

விற்பனையகம் வந்த ஹூண்டாய் டக்சன் ஃபேஸ்லிப்ட்

Published On 2020-07-08 11:19 GMT   |   Update On 2020-07-08 11:19 GMT
ஹூண்டாய் நிறுவனத்தின் டக்சன் ஃபேஸ்லிப்ட் மாடல் கார் விற்பனையகம் வந்து இருப்பதை வெளிப்படுத்தும் வீடியோ லீக் ஆகி உள்ளது.
 

ஹூண்டாய் நிறுவனம் விரைவில் டக்சன் ஃபேஸ்லிப்ட் மாடல் காரை அறிமுகம் செய்ய இருக்கிறது. 2020 ஆட்டோ எக்ஸ்போ விழாவில் காட்சிக்கு வைக்கப்பட்ட நிலையில், புதிய கார் ஜூலை 14 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகமாக இருக்கிறது.

வெளியீட்டிற்கு முன் புதிய கார் விற்பனையகம் வந்திருக்கிறது. இதனை உறுதிப்படுத்தும் வீடியோ இணையத்தில் வெளியாகி இருக்கிறது. காரை சுற்றி எடுக்கப்பட்டு இருக்கும் வீடியோவில் காரில் செய்யப்பட்டுள்ள மாற்றங்கள் மற்றும் அப்டேட்களை தெளிவாக காட்டுகிறது.



புதிய மேம்பட்ட மாடல் டீசல் வேரியண்ட்டில் ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வசதியும், சில காஸ்மெடிக் மாற்றங்கள் செய்யப்பட்டு இருக்கின்றன. அதன்படி புதிய கார் வெளிப்புறம் கேஸ்கேடிங் கிரில், புதுவடிவமைப்பு கொண்ட ஹெட்லைட்கள், டெயில் லைட்கள், முன்புறம் மற்றும் பின்புற பம்ப்பர்கள் வழங்கப்படுகின்றன.

காரின் உள்புறம் புது டேஷ்போர்டு வடிவமைப்பு, ஃபிரீ-ஸ்டேன்டிங் 8 இன்ச் தொடுதிரை வசதி கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆப்பிள் கார்பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் புளுலின்க் கனெக்ட்டெட் கார் தொழில்நுட்பம் வழங்கப்படுகிறது. இத்துடன் வயர்லெஸ் சார்ஜர், பானரோமிக் சன்ரூஃப் வழங்கப்பட்டு இருக்கிறது.
Tags:    

Similar News