ஆட்டோமொபைல்
ஹோண்டா டபிள்யூஆர்-வி ஃபேஸ்லிப்ட்

மேம்பட்ட அம்சங்களுடன் ஹோண்டா டபிள்யூஆர்-வி ஃபேஸ்லிப்ட் அறிமுகம்

Published On 2020-07-03 09:42 GMT   |   Update On 2020-07-03 09:42 GMT
ஹோண்டா நிறுவனத்தின் டபிள்யூஆர்-வி ஃபேஸ்லிப்ட் மாடல் கார் மேம்பட்ட அம்சங்களுடன் அறிமுகம் செய்யப்பட்டது.

ஹோண்டா டபிள்யூஆர்-வி ஃபேஸ்லிப்ட் மாடல் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்தியாவில் புதிய ஹோண்டா கார் துவக்க விலை ரூ. 8.50 லட்சம், எக்ஸ் ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 

இந்தியாவில் ஹோண்டா டபிள்யூஆர்-வி ஃபேஸ்லிப்ட் மாடல் நான்கு வேரியண்ட்களில், ஆறு வித நிறங்களில் கிடைக்கிறது. புதிய காருக்கான முன்பதிவுகள் மார்ச் மாத வாக்கில் துவங்கப்பட்டது. இந்தியாவில் ஹோண்டா டபிள்யூஆர்-வி ஃபேஸ்லிப்ட் முன்பதிவு கட்டணம் ரூ. 21 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டது.

ஹோண்டா டபிள்யூஆர்-வி ஃபேஸ்லிப்ட் மாடலில் 1.2 லிட்டர் பெட்ரோல் மோட்டார் மற்றும் 1.5 லிட்டர் டீசல் என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இவை முறையே 88 பிஹெச்பி பவர், 110 என்எம் டார்க் செயல்திறன் மற்றும் 98 பிஹெச்பி பவர், 200 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது.

இதன் பெட்ரோல் என்ஜின் 5 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் கொண்டிருக்கிறது. இதன் டீசல் என்ஜின் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் கொண்டிருக்கிறது. 

புதிய ஹோண்டா டபிள்யூஆர்-வி மாடல் பிரீமியம் ஆம்பர் மெட்டாலிக், லூனார் சில்வர் மெட்டாலிக், மாடன் ஸ்டீல் மெட்டாலிக், கோல்டன் பிரவுன் மெட்டாலிக், ரேடியண்ட் ரெட் மெட்டாலிக் மற்றும் பிளாட்டினம் வைட் பியல் நிறங்களில் கிடைக்கிறது. 
Tags:    

Similar News