ஆட்டோமொபைல்
ட்ரியோ

மூன்று எலெக்ட்ரிக் வாகனங்களை வெளியிட மஹிந்திரா திட்டம்

Published On 2020-07-01 09:47 GMT   |   Update On 2020-07-01 09:49 GMT
மஹிந்திரா நிறுவனம் இதே நிதியாண்டில் மூன்று எலெக்ட்ரிக் வாகனங்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

மஹிந்திரா நிறுவனம் இந்த நிதியாண்டு முடிவதற்குள் மூன்று புதிய எலெக்ட்ரிக் வாகனங்களை அறிமுகம் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மஹிந்திரா நிறுவனத்தின் தற்போதைய எலெக்ட்ரிக் வாகனங்கள் இந்திய சந்தையில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன.

தற்போதைய தகவல்களின்படி மஹிந்திரா நிறுவனம் தனது வாகனங்களின் எலெக்ட்ரிக் வெர்ஷனை அறிமுகம் செய்ய திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது. மஹிந்திரா நிறுவனம் ஆட்டம் எலெக்ட்ரிக் மற்றும் ட்ரியோ சோர் போன்ற வாகனங்களை வெளியிட திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது.

வர்த்தக வாகனங்கள் மட்டுமின்றி இகேயுவி100 மாடலையும் அறிமுகம் செய்ய மஹிந்திரா திட்டமிட்டு வருகிறது. இந்திய சந்தையில் அறிமுகமாகும் போது, இந்த மாடல் விலை குறைந்த எலெக்ட்ரிக் மாடல் என்ற பெருமையை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

கடந்த ஆண்டு மட்டும் மஹிந்திரா எலெக்ட்ரிக் நிறுவனம் சுமார் 14 ஆயிரத்திற்கும் அதிக எலெக்ட்ரிக் வாகனங்களை விற்பனை செய்து இருக்கிறது. இதில் பெரும்பாலான மாடல்கள் ட்ரியோ எலெக்ட்ரிக் ஆட்டோரிக்ஷா மாடல்கள் ஆகும். 

ஆட்டோமொபைல் சந்தையில் ஏற்பட்டுள்ள உற்பத்தி குறைபாடு காலக்கட்டத்திலும் மஹிந்திரா எலெக்ட்ரிக் வாகனங்கள் பிரிவில் தொடர்ந்து அதிக கவனம் செலுத்தி வருகிறது. ட்ரியோ மாடலுக்கான வரவேற்பு அதிகரிக்க துவங்கியதால், மஹிந்திரா நிறுவனம் ட்ரியோ சோர் மாடல் மீதும் அதிக கவனம் செலுத்த துவங்கி இருப்பதாக கூறப்படுகிறது. 

Tags:    

Similar News