ஆட்டோமொபைல்
ஆடி கியூ5

சர்வதேச சந்தையில் ஆடி கியூ5 ஃபேஸ்லிப்ட் அறிமுகம்

Published On 2020-06-30 06:49 GMT   |   Update On 2020-06-30 06:49 GMT
ஆடி நிறுவனத்தின் புதிய கியூ5 ஃபேஸ்லிப்ட் மாடல் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.


ஆடி நிறுவனத்தின் கியூ5 ஃபேஸ்லிப்ட் மாடல் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த ஆடம்பர எஸ்யுவி மாடல் சர்வதேச சந்தையில்  இந்த ஆண்டு இறுதியில் விற்பனைக்கு வருகிறது. இந்தியாவில் இந்த மாடல் அடுத்த ஆண்டு அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

புதிய காரில் ஆக்டாகோனல் கிரில், கூர்மையான எல்இடி ஹெட்லேம்ப்கள், ஸ்போர்டி பம்ப்பர் வழங்கப்பட்டுள்ளது. இந்த காரின் உயர் ரக மாடல்களில் மேட்ரிக்ஸ் எல்இடி ஹெட்லைட்கள் ஆப்ஷனாக வழங்கப்படுகிறது. காரின் பின்புறம் ட்வீக் செய்யப்பட்ட எல்இடி டெயில்லைட்கள் மற்றும் மேம்பட்ட பம்ப்பர் வழங்கப்பட்டு இருக்கிறது.

காரின் உள்புறம் புதிய 10.1 இன்ச் தொடுதிரை வசதி கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், முழுமையான டிஜிட்டல் விர்ச்சுவல் காக்பிட் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், அமேசான் அலெக்சா விர்ச்சுவல் அசிஸ்டண்ட் உடன் கனெக்ட்டெட் கார் தொழில்நுட்பம் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது.

ஆடி கியூ5 ஃபேஸ்லிப்ட் மாடலில் 2.0 லிட்டர் டர்போ பெட்ரோல் மோட்டார் ஆப்ஷன் கொண்டிருக்கிரது. இது 245 பிஹெச்பி பவர், 370 என்எம் டார்க் செயல்திறன், 7 ஸ்பீடு எஸ் டிரானிக் டிஎஸ்ஜி டிரான்ஸ்மிஷன், குவாட்ரோ ஆல் வீல் டிரைவ் ஸ்டான்டர்டு அம்சமாக வழங்கப்படுகிறது. 

இந்தியாவில் புதிய ஆடி கியூ5 ஃபேஸ்லிப்ட் விலை ரூ. 55 லட்சம், எக்ஸ் ஷோரூம் வரை நிர்ணயம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மாடல் மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்சி மற்றும் லேண்ட் ரோவர் டிஸ்கவரி ஸ்போர்ட் போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது.
Tags:    

Similar News