ஆட்டோமொபைல்
மெர்சிடிஸ் பென்ஸ் கார்

மெர்சிடிஸ் பென்ஸ் மற்றும் என்விடியா கூட்டணியில் தானியங்கி கார் தொழில்நுட்பம்

Published On 2020-06-29 07:04 GMT   |   Update On 2020-06-29 07:04 GMT
மெர்சிடிஸ் பென்ஸ் மற்றும் என்விடியா நிறுவனங்கள் கூட்டணியில் உருவாகும் தானியங்கி கார் தொழில்நுட்பம் வெளியீட்டு விவரங்களை பார்ப்போம்.


மெர்சிடிஸ் பென்ஸ் மற்றும் என்விடியா நிறுவனங்கள் இடையே வியாபார ஒப்பந்தம் கையெழுத்தாகிறது. இரு நிறுவனங்களும் கூட்டணி அமைத்து வாகனங்களுக்குள் கம்ப்யூட்டிங் சிஸ்டம்கள், ஏஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவு சார்ந்த உள்கட்டமைப்பு உள்ளிட்ட துறைகளில் இணைந்து பணியாற்ற இருப்பதாக கூறப்படுகிறது. 

2024 ஆம் ஆண்டு முதல் இந்த தானியங்கி கார் தொழில்நுட்பம் அடுத்த தலைமுறை மெர்சிடிஸ் பென்ஸ் வாகனங்களில் அறிமுகம் செய்யப்படும் என கூறப்படுகிறது. மேலும் ஆட்டோமொபைல் துறையில் இதுவரை இல்லாத அளவு அதிக சவால்மிக்க மற்றும் மேம்பட்ட கம்ப்யூட்டிங் தளத்தை உருவாக்க திட்டமிட்டு இருக்கின்றன. 

இரு நிறுவனங்கள் கூட்டணியில் தயாராகும் மென்பொருள் சார்ந்த தளம், என்விடியா டிரைவ் பிளாட்பார்மில் உருவாகிறது. இதன் முதற்கட்டமாக ஒரு முகவரியில் இருந்து மற்றொரு முகவரிக்கும் செல்லும் திறன் வழங்கப்படுகிறது. கூடுதலாக பல்வேறு பாதுகாப்பு மற்றும் சௌகரியத்தை வழங்கும் அசங்கள் வழங்கப்படுகிறது. 

மேலும் கார் பயன்பாடு முழுக்க மென்பொருள் செயலிகள் மற்றும் சந்தா சேவைகள் உள்ளிட்டவை ஓவர் தி ஏர் மென்பொருள் அப்டேட்களாக வழங்கப்பட இருக்கிறது. 
Tags:    

Similar News