ஆட்டோமொபைல்
மெக்லாரென் 720எஸ் லீ மேன்ஸ் ஸ்பெஷல் எடிஷன்

மெக்லாரென் 720எஸ் லீ மேன்ஸ் ஸ்பெஷல் எடிஷன் அறிமுகம்

Published On 2020-06-22 05:45 GMT   |   Update On 2020-06-22 05:45 GMT
மெக்லாரென் நிறுவனம் தனது 720எஸ் மாடலின் லீ மேன்ஸ் ஸ்பெஷல் எடிஷன் காரை அறிமுகம் செய்து இருக்கிறது.



மெக்லாரென் நிறுவனம் லீ மேன்சில் 24 மணி நேர போட்டியில் வெற்றி பெற்றதை கொண்டாடும் வகையில், 720எஸ் கூப் மாடலை தழுவி 720எஸ் லீ மேன்ஸ் ஸ்பெஷல் எடிஷன் காரை அறிமுகம் செய்துள்ளது. புதிய ஸ்பெஷல் எடிஷன் உலகில் மொத்தம் 50 யூனிட்களே விற்பனை செய்யப்பட இருக்கின்றன.

புதிய லீ மேன்ஸ் ஸ்பெஷல் எடிஷன் மாடலில் லீ மேன்சில் மெக்லாரெனின் 25 ஆண்டுகளை சிறப்பிக்கும் லோகோ பொருத்தப்பட்டுள்ளது. புதிய காரின் VIN அனைத்தும் 298 எனும் எண்ணில் துவங்கும். புதிய ஸ்பெஷல் எடிஷனின் வெளிப்புறம் மெக்லாரென் ஆரஞ்சு மற்றும் சார்த் கிரே நிறங்களை கொண்டிருக்கின்றன.  

இத்துடன் பக்கவாட்டில் மெக்லாரென் 25 ஆண்டுகள் லீ மேன்ஸ் லோகோ பொருத்தப்பட்டுள்ளது. இத்துடன் கிளாஸ் பிளாக் ரூஃப் ஸ்கூப், கார்பன் ஃபைபர் லோவர் செய்யப்பட்ட முன்புற ஃபென்டர்கள், ஐந்து ஸ்போக் கொண்ட எல்எம் வீல்கள், கோல்டு நிற பிரேக் கேலிப்பர்கள் மற்றும் காண்டிராஸ்ட் கிளாஸ் பிளாக் பாடி உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன. 



மெக்லாரென் 720எஸ் லீ மேன்ஸ் ஸ்பெஷல் எடிஷன் மாடலில் 4.0 லிட்டர், ட்வின் டர்போ சார்ஜ் செய்யப்பட்ட வி8 என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 720 பிஹெச்பி பவர், 770 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இந்த கார் மணிக்கு 0 முதல் 100 கிலோமீட்டர் வேகத்தை 2.9 நொடிகளில் எட்டிவிடும்.
 
மெக்லாரென் 720எஸ் லீ மேஸ் ஸ்பெஷல் எடிஷன் மாடல் மெக்லாரென் எஃப்1 ஜிடிஆர் #59 மாடல் என்டியூரன்ஸ் பந்தயத்தில் வெற்றி பெற்றதன் 25 ஆண்டுகளை கொண்டாடும் வகையில் அறிமுகம் செய்யப்பட்டது. 

இந்த காரினை ஜெஜெ லெட்டோ, யானிக் டல்மாஸ் மற்றும் மசோன்ரி செக்யா ஆகியோர் ஓட்டினர். மற்ற மூன்று மெக்லாரென் எஃப்1 ஜிடிஆர் மாடல்கள் முதல் ஐந்து இடங்களுக்குள் இடம் பிடித்தன.
Tags:    

Similar News