ஆட்டோமொபைல்
ஜீப் கிராண்ட் காம்பஸ்

விரைவில் புதிய வேரியண்ட் ஜீப் மாடல் இந்தியாவில் அறிமுகம் என தகவல்

Published On 2020-06-17 08:02 GMT   |   Update On 2020-06-17 08:02 GMT
ஜீப் இந்தியா நிறுவனம் ஜீப் காம்பஸ் ஃபேஸ்லிப்ட் வெளியீட்டை தொடர்ந்து புதிய ஜீப் வேரியண்ட்டை அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.



ஜீப் நிறுவனம் 2021 காம்பஸ் ஃபேஸ்லிப்ட் மாடலை சில தினங்களுக்கு முன் சர்வதேச சந்தையில் வெளியிட்டது. புதிய 2021 ஜீப் காம்பஸ் ஃபேஸ்லிப்ட் சில அப்டேட்களுடன் அறிமுகமாகி இருக்கிறது. புதிய காம்பஸ் ஃபேஸ்லிப்ட் மாடல் இந்தியாவில் இந்த ஆண்டு இறுதியிலோ அல்லது அடுத்த ஆண்டு துவக்கத்திலோ அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஏழு பேர் பயணிக்கக்கூடிய ஜீப், Low D 3-row எனும் குறியீட்டு பெயர் கொண்ட எஸ்யுவி மாடல் ஜீப் கிராண்ட் காம்பஸ் எனும் பெயரில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த கார் இந்தியாவில் ஜீப் ஃபேஸ்லிப்ட் மாடல் அறிமுகம் செய்யப்பட்டதும் வெளியாகும் என கூறப்படுகிறது.



ஜீப் கிராண்ட் காம்பஸ் சாதாரண காம்பஸ் மாடலை விட நீண்ட வீல்பேஸ் கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் வடிவமைப்பு பார்க்க காம்பஸ் ஃபேஸ்லிப்ட் மாடலை தழுவி இருக்கும் என கூறப்படுகிறது. புதிய காரில் மேம்பட்ட கிரில் வடிவமைப்பு, மேம்பட்ட ஹெட்லேம்ப் மற்றும் பம்ப்பர்கள் வழங்கப்படும் என தெரிகிறது.

புதிய ஜீப் கிராண்ட் காம்பஸ் மாடலில் 2.0 லிட்டர் டீசல் என்ஜின் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. இந்தியாவில் இதன் விற்பனை அடுத்த ஆண்டின் இரண்டாவது காலாண்டில் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

சமீபத்தில் ஜீப் இந்தியா நிறுவனம் பிஎஸ்6 ரக காம்பஸ் மாடல்களை ரூ. 16.49 லட்சம், எக்ஸ் ஷோரூம் எனும் துவக்க விலையில் அறிமுகம் செய்தது. இத்துடன் ஸ்போர்ட் வேரியண்ட் விற்பனையை நிறுத்தியது. தற்சமயம் ஸ்போர்ட் பிளஸ் இந்த எஸ்யுவி மாடலின் புதிய பேஸ் வேரியண்ட் ஆகியுள்ளது.
Tags:    

Similar News