ஆட்டோமொபைல்
போர்ஷ் பனமெரா 4

போர்ஷ் பனமெரா 4 ஸ்பெஷல் எடிஷன் இந்தியாவில் அறிமுகம்

Published On 2020-06-16 07:08 GMT   |   Update On 2020-06-16 07:08 GMT
போர்ஷ் நிறுவனம் இந்திய சந்தையில் பனமெரா ஸ்பெஷல் எடிஷன் மாடலினை அறிமுகம் செய்துள்ளது.



ஜெர்மன் நாட்டு ஸ்போர்ட் கார் உற்பத்தியாளரான போர்ஷ் இந்திய சந்தையில் பனமெரா ஸ்பெஷல் எடிஷன் காரை அறிமுகம் செய்துள்ளது. புதிய பனமெரா 4 10 Years எடிஷன் விலை இந்தியாவில் ரூ. 1.60 கோடி, எக்ஸ் ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 

இது போர்ஷ் நிறுவனம் இந்திய சந்தையில் பத்தாவது ஆண்டு விழாவை முன்னிட்டு வெளியிடப்பட்டுள்ளது. புதிய ஸ்பெஷல் எடிஷன் பனமெரா 4 ஆல்-வீல்-டிரைவ் வெர்ஷனை சார்ந்து உருவாக்கப்பட்டுள்ளது. இதில் 21 இன்ச் அலாய் வீல்கள், பனமெரா 10 பேட்ஜிங் வழங்கப்பட்டுள்ளது.



போர்ஷ் பனமெரா 4 10 Years எடிஷன் மாடலில் மேட்ரிக்ஸ் எல்இடி ஹெட்லேம்ப்கள், போர்ஷ் டைனமிக் லைட் சிஸ்டம் பிளஸ் சிஸ்டம் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் ரியர்-வியூ கேமரா, பானரோமிக் சன்ரூஃப், போஸ் சரவுண்ட் சவுண்ட் சிஸ்டம் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது.

புதிய காரில் 2.8 லிட்டர் வி6 என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 226 பிஹெச்பி பவர், 450 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 8 ஸ்பீடு டூயல் கிளட்ச் ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்பட்டுள்ளது.

இவைதவிர புதிய போர்ஷ் மாடலில் பல்வேறு அதிநவீன அம்சங்கள், உபகரணங்கள் மற்றும் மேம்பட்ட பாதுகாப்பு வசதிகள் வழங்கப்பட்டு இருக்கின்றன.
Tags:    

Similar News