ஆட்டோமொபைல்
பிஎம்டபிள்யூ எக்ஸ்7 எம்50டி

இந்தியாவில் பிஎம்டபிள்யூ எக்ஸ்7 எம்50டி புதிய வேரியண்ட் அறிமுகம்

Published On 2020-06-13 10:30 GMT   |   Update On 2020-06-13 10:30 GMT
பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் எக்ஸ்7 எம்50டி பெர்ஃபார்மன்ஸ் வேரியண்ட் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது.



பிஎம்டபிள்யூ நிறுவனம் தனது எக்ஸ்7 எஸ்யுவி மாடலின் டாப் எண்ட் டீசல் வேரியண்ட்டை இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. புதிய பிஎம்டபிள்யூ எக்ஸ்7 எம்50டி மாடலின் துவக்க விலை ரூ. 1.63 கோடி, எக்ஸ் ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 

புதிய காரின் முன்புறம் பிரம்மாண்ட பம்ப்பர், பெரிய ஏர்-இன்டேக் புதிய மெஷ் கிரில், ஃபாக் லேம்ப்கள், பக்கவாட்டுகளில் எம் பேட்ஜ் கொண்டிருக்கிறது. இத்துடன் ஸ்போர்டி எக்சாஸ்ட், 21 இன்ச் எம் ஸ்டைல் லைட்-அலாய் வீல்கள் மற்றும் 22 இன்ச் அலாய் ஆப்ஷனாக வழங்கப்படுகிறது.



பிஎம்டபிள்யூ எக்ஸ்7 எம்50டி மாடலில் பல்வேறு புதிய அம்சங்கள் மற்றும் உபகரணங்களை கொண்டிருக்கிறது. இவற்றில் பெரும்பாலானவை தற்போதைய மாடலில் இருந்ததை போன்றே இருக்கிறது. 

காரின் உள்புறம் 12.3 இன்ச் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், 12.3 இன்ச் தொடுதிரை வசதி கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆப்பிள் கார்பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ வசதி கொண்டிருக்கிறது. 

புதிய பிஎம்டபிள்யூ எக்ஸ்7 எம்50டி மாடலில் 3.0 லிட்டர் இன்-லைன் 6 சிலிண்டர் டீசல் என்ஜின் கொண்டிருக்கிறது. இது 395 பிஹெச்பி பவர், 760 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 8 ஸ்பீடு ஸ்டெப்டிரானிக் ஸ்போர்ட் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது.
Tags:    

Similar News