ஆட்டோமொபைல்
2021 டொயோட்டா ஃபார்ச்சூனர்

சர்வதேச சந்தையில் 2021 டொயோட்டா ஃபார்ச்சூனர் அறிமுகம்

Published On 2020-06-04 11:13 GMT   |   Update On 2020-06-04 11:13 GMT
டொயோட்டா நிறுவனம் 2021 ஃபார்ச்சூனர் ஃபேஸ்லிப்ட் மாடல் காரினை சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்துள்ளது.



டொயோட்டா நிறுவனம் 2021 ஃபார்ச்சூனர் ஃபேஸ்லிப்ட் மாடலினை தாய்லாந்தில் அறிமுகம் செய்துள்ளது. புதிய டொயோட்டா ஃபார்ச்சுனர் ஃபேஸ்லிப்ட் மாடலில் பல்வேறு மாற்றங்கள் மற்றும் புதிய அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன.

அதன்படி புதிய டொயோட்டா ஃபார்ச்சூனர் மாடலில் கூர்மையான எல்இடி ஹெட்லேம்ப்கள், எல் வடிவம் கொண்ட எல்இடி டே-டைம் ரன்னிங் லைட்கள், முன்புறம் பெரிய கிரில், மேம்பட்ட முன்புற பம்ப்பர், எல்இடி ஃபாக் லேம்ப்கள், பெரிய ஏர் இன்டேக், ஸ்கிட் பிளேட் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன.



காரின் உள்புறம் தற்போதைய மாடலில் உள்ள கேபின் வழங்கப்பட்டுள்ளது. எனினும், இதில் 8 அங்குல தொடுதிரை வசதி கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆப்பிள் கார்பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ போன்ற வசதிகள் வழங்கப்பட்டு இருக்கின்றன.

2021 டொயோட்டா ஃபார்ச்சூனர் மாடலில் 2.8 லிட்டர் டர்போசார்ஜ் செய்யப்பட்ட டீசல் என்ஜின் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதே என்ஜின் தற்போதைய மாடலில் 177 பிஹெச்பி பவர், 450 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. எனினும், 2021 மாடலில் இந்த என்ஜின் 204 பிஹெச்பி பவர், 500 என்எம் டார்க் செயல்திறன் வழங்கும் என தெரிகிறது. 
Tags:    

Similar News