ஆட்டோமொபைல்
2020 மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்இ

2020 மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்இ 450 இந்தியாவில் அறிமுகம்

Published On 2020-06-03 12:01 GMT   |   Update On 2020-06-03 12:01 GMT
மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் 2020 மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்இ 450 இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது.



மெர்சிடிஸ் பென்ஸ் இந்தியா நிறுவனம் தனது ஜிஎல்இ எஸ்யுவி மாடலின் இரண்டு புதிய வேரியண்ட்களை இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. இவை ஜிஎல்இ 450 4மேடிக் மற்றும் ஜிஎல்இ 400டி 4மேடிக் என அழைக்கப்படுகிறது. இதில் டாப் எண்ட் மாடலான ஜிஎல்இ 450 4மேடிக் பெட்ரோல் மாடல் விலை ரூ. 88.80 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

புதிய மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்இ 4டி 4மேடிக் டீசல் வேரியண்ட் டாப் எண்ட் ஜிஎல்இ 400டி ஹிப்-ஹாப் எடிஷனின் கீழ் நிலை நிறுத்தப்பட்டுள்ளது. புதிய ஜிஎல்இ 400டி விலை ரூ. 89.90 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.



மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்இ 450 மாடலில் பிஎஸ்6 ரக 3.0 லிட்டர் ஆறு சிலிண்டர் டர்போ-பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 367 பிஹெச்பி பவர், 500 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 48 வோல்ட் மைல்டு-ஹைப்ரிட் சிஸ்டம் வழங்கப்பட்டு இருக்கிறது.

இதன் எலெக்ட்ரிக் மோட்டார் 22 பிஹெச்பி மற்றும் 250 என்எம் டார்க் கூடுதல் செயல்திறன் வழங்குகிறது. ஹைப்ரிட் பவர்டிரெயினுடன் 9ஜி-டிரானிக் ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் சிஸ்டம் வழங்கப்பட்டுள்ளது. 
Tags:    

Similar News