ஆட்டோமொபைல்
ஸ்கோடா ரேபிட்

ஸ்கோடா ரேபிட் டிஎஸ்ஐ ஆட்டோமேடிக் வேரியண்ட் இந்திய வெளியீட்டு விவரம்

Published On 2020-05-30 10:43 GMT   |   Update On 2020-05-30 10:43 GMT
ஸ்கோடா நிறுவனத்தின் ரேபிட் டிஎஸ்ஐ ஆட்டோமேடிக் வேரியண்ட்டின் இந்திய வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.



ஸ்கோடா நிறுவனம் தனது ரேபிட் டிஎஸ்ஐ மாடலில் ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வசதியை இந்திய சந்தையில் இந்த ஆண்டு அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன் ரேபிட் டிஎஸ்ஐ டாப் ண்ட் வேரியண்ட்களில் மட்டுமே வழங்கப்படும் என கூறப்படுகிறது.

புதிய ரேபிட் டிஎஸ்ஐ மாடலில் 6 ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் யூனிட் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதே யூனிட் ஃபோக்ஸ்வேகன் போலோ மற்றும் வென்டோ மாடல்களிலும் வழங்கப்பட்டு இருக்கிறது. இரு பிராண்டுகளும் உபகரணங்களை மாற்றி பயன்படுத்துவதை வாடிக்கையாக கொண்டிருக்கின்றன.



2020 ரேபிட் மாடலில் ஒற்றை 1.0 லிட்டர் டிஎஸ்ஐ பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. 999சிசி, மூன்று சிலிண்டர் யூனிட் அதிகபட்சமாக 108பிஹெச்பி பவர், 175 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இந்த என்ஜினுடன் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது.

புதிய செடான் மாடலில் ப்ரோஜெக்டர் ஹெட்லைட்கள், இன்டகிரேட் செய்யப்பட்ட எல்இடி டிஆர்எல்கள், எல்இடி டெயில்லைட்கள், 16 இன்ச் அலாய் வீல்கள் வழங்கப்பட்டுள்ளன. காரின் உள்புறம் ஆட்டோமேடிக் கிளைமேட் கண்ட்ரோல், எட்டு அங்குல தொடுதிரை வசதி கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆப்பிள் கார்பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ வசதிகளை கொண்டிருக்கிறது.
Tags:    

Similar News