ஆட்டோமொபைல்
ஆப்ஸ்கூட்டர்

விரைவில் இந்தியா வரும் ஒலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்

Published On 2020-05-29 11:20 GMT   |   Update On 2020-05-29 11:20 GMT
ஒலா நிறுவனம் விரைவில் இந்திய சந்தையில் புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல்களை அறிமுகம் செய்ய இருக்கிறது.



ஒலா எலெக்ட்ரிக் மொபிலிட்டி பிரைவேட் லிமிட்டெட் நிறுவனம் நெதர்லாந்தை சேர்ந்த எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்கள் தயாரிப்பு நிறுவனமான எடெர்கோ பிவி-யை கையகப்படுத்தி இருக்கிறது. மேலும் புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலை இந்தியா மற்றும் வெளிநாட்டு சந்தைகளில் 2021 ஆண்டு வாக்கில் வெளியிட இருப்பதாக தெரிவித்துள்ளது.

2014 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட எடெர்கோ நிறுவனம் முழுமையான எலெக்ட்ரிக் வாகனமாக ஆப்ஸ்கூட்டரை உருவாக்கி இருக்கிறது. இந்த ஸ்கூட்டர் உலகம் முழுக்க பல்வேறு விருதுகளை வென்று இருக்கிறது. 2019 சர்வதேச நுகர்வோர் மின்சாதன விழாவில் இந்த ஸ்கூட்டர் அதன் வடிவமைப்பு மற்றும் பொறியியல் திறனுக்காக புகழ்பெற்றது.



2018 ஆம் ஆண்டு முதன்முதலில் அறிமுகம் செய்யப்பட்ட ஆப்ஸ்கூட்டர், அதிக திறன் கொண்ட பேட்டரிகளை பயன்படுத்துகிறது. இவை ஒருமுறை சார்ஜ் செய்தால் அதிகபட்சம் 240 கிலோமீட்டர் வரை செல்லும் திறன் கொண்டிருக்கிறது. இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் 7.5 கிலோ எடை கொண்ட கழற்றக்கூடிய பேட்டரிகள் பொருத்தப்பட்டுள்ளன.

இவற்றை முழுமையாக சார்ஜ் செய்ய 2 மணி நேரம் 30 நிமிடங்கள் ஆகும். ஆப்ஸ்கூட்டரில் மொத்தம் மூன்று பேட்டரிகள் வழங்கப்பட்டுள்ளன. இவை ஒவ்வொன்றும் 80 கிலோமீட்டர் வரை செல்லும் திறன் கொண்டிருக்கிறது. 
Tags:    

Similar News