ஆட்டோமொபைல்
ரெனால்ட் கேப்டூர்

அசத்தல் அம்சங்களுடன் அறிமுகமான 2020 ரெனால்ட் கேப்டூர்

Published On 2020-05-23 11:13 GMT   |   Update On 2020-05-23 11:13 GMT
ரெனால்ட் நிறுவனத்தின் 2020 கேப்டூர் மாடல் ரஷ்ய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் முழு விவரங்களை பார்ப்போம்.



2020 ரெனால்ட் கேப்டூர் கார் ரஷ்ய சந்தையில் அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புதிய மாடல் இந்த ஆண்டு வாக்கில் இந்திய சந்தையில் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய 2020 கேப்டூர் மாடலின் வெளிப்புறம், உள்புறம் மற்றும் என்ஜின் அம்சங்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

அதன்படி 2020 கேப்டூர் மாடல் காரில் புதிய குரோம் கிரில், புதுவித அலாய் வீல்கள், டூயல் டோன் பெயின்ட் செய்யப்பட்டுள்ளது. இதன் ஒட்டுமொத்த தோற்றம் பார்க்க ஃபேஸ்லிப்ட் மாடலை போன்று காட்சியளிக்கிறது. காரின் உள்புறத்தில் 3 ஸ்போக் ஸ்டீரிங் வீல் டிசைன், எட்டு அங்குல தொடுதிரை வசதி கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் வழங்கப்படுகிறது.



இத்துடன் ஆண்ட்ராய்டு ஆட்டோ, ஆப்பிள் கார்பிளே மற்றும் ரெனால்ட் நிறுவனத்தின் கனெக்ட்டெட் தொழில்நுட்பம் வழங்கப்பட்டு இருக்கிறது. கிளாஸ் பிளாக் சென்ட்ரல் பேனல், பிரீமியம் போஸ் ஆடியோ சிஸ்டம், ஆம்பியன்ட் மூட் லைட்னிங் உள்ளிட்ட வசதிகளும் புதிய கேப்டூர் மாடலில் வழங்கப்பட்டுள்ளது. 

பாதுகாப்பிற்கு புதிய கேப்டூர் மாடலில் 360 டிகிரி கேமரா, பிளைன்ட் ஸ்பாட் மாணிட்டரிங் வசதி வழங்கப்பட்டுள்ளது. இதுதவிர பல்வேறு ஏர்பேக்குகள், ஏபிஎஸ் மற்றும் இபிடி, வேகமாக செல்லும் போது எச்சரிக்கை செய்யும் தொழில்நுட்பம் வழங்கப்பட்டு இருக்கிறது.

ரஷ்யாவில் அறிமுகமாகி இருக்கும் கேப்டூர் மாடலில் 1.6 லிட்டர் பெட்ரோல் என்ஜின் மற்றும் 1.3 லிட்டர் டர்போ பெட்ரோல் யூனிட் வழங்கப்படுகிறது. இரு என்ஜின்களும் முறையே 113 பிஹெச்பி பவர் மற்றும் 154 பிஹெச்பி பவர் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் சிவிடி டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது.
Tags:    

Similar News