ஆட்டோமொபைல்
கியா சொனெட்

கொரோனா பாதிப்பிலும் தாமதமின்றி அறிமுகமாகும் கியா சொனெட்

Published On 2020-05-21 09:07 GMT   |   Update On 2020-05-21 09:07 GMT
கியா மோட்டார்ஸ் நிறுவனத்தின் புதிய சொனெட் மாடல் கொரோனா பாதிப்பிலும் முந்தைய திட்டப்படி அறிமுகம் செய்யப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.



கியா சொனெட் மாடல் கார் இந்தியாவில் திட்டமிட்டப்படி அறிமுகம் செய்யப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. இந்திய சந்தையில் கியா சொனெட் மாடல் இந்த ஆண்டு பண்டிகை காலத்தில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக நாடு தழுவிய ஊரடங்கு அமலில் இருக்கிறது. எனினும், கியா சொனெட் மாடல் திட்டமிட்டப்படி அறிமுகம் செய்யப்படும் என கியா மோட்டார்ஸ் இந்தியா விற்பனை மற்றும் விளம்பர பிரிவு தலைவர் மனோகர் பட் தனியார் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார். எனினும், நாடு தழுவிய ஊரடங்கு மேலும் நீட்டிக்கப்பட்டால், இதன் அறிமுகம் தள்ளிபோகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது 



புதிய மாடலை அறிமுகம் செய்வதன் மூலம் ஊரடங்கு நிறைவுற்றதும் கியா நிறுவனம் வாடிக்கையாளர்களை விற்பனை மையங்களுக்கு வரவழைக்க முயற்சிக்கிறது. மேலும் பண்டிகை காலத்தில் புதிய வாகனத்தை அறிமுகம் செய்வதன் மூலம் விற்பனையை ஊக்குவிக்க முடியும் என அவர் மேலும் தெரிவித்தார்.

வெளியீட்டிற்கு முன் கியா சொனெட் மாடல் ஆட்டோ எக்ஸ்போ விழாவில் கான்செப்ட் வடிவில் காட்சிப்படுத்தப்பட்டது. இதுதவிர புதிய சொனெட் மாடல் இந்தியாவில் தீவிரமாக சோதனை செய்யப்படுகிறது. முன்னதாக இந்த கார் சோதனை செய்யப்படும் போது எடுக்கப்பட்ட ஸ்பை புகைப்படம் மற்றும் வீடியோக்கள் பலமுறை இணையத்தில் வெளியாகி இருக்கின்றன.
Tags:    

Similar News