ஆட்டோமொபைல்
2020 ஸ்விஃப்ட் ஃபேஸ்லிப்ட்

2020 மாருதி சுசுகி ஸ்விஃப்ட் ஃபேஸ்லிப்ட் அறிமுகம்

Published On 2020-05-20 10:06 GMT   |   Update On 2020-05-20 10:06 GMT
2020 மாருதி சுசுகி ஸ்விஃப்ட் ஃபேஸ்லிப்ட் மாடல் அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்யப்பட்டது. இதன் முழு விவரங்களை பார்ப்போம்.



மாருதி சுசுகி நிறுவனம் 2020 ஸ்விஃப்ட் ஃபேஸ்லிப்ட் மாடலை ஜப்பான் நாட்டில் அறிமுகம் செய்துள்ளது. புதிய ஹேட்ச்பேக் மாடலின் வெளிப்புறம் மற்றும் உள்புறங்களில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் புதிய ஸ்விப்ட் மாடல் அடுத்த ஆண்டு வாக்கில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஸ்விஃப்ட் ஃபேஸ்லிப்ட் மாடலின் வெளிப்புறம் புதிய கிரில் ஹனிகொம்ப் மெஷ் பேட்டன், புதிய வடிவமைப்பில் ஹெட்லைட், அதிரடி தோற்றம் கொண்ட முன்புற பம்ப்பர் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் புதிய அலாய் வீல், டூயல் டோன் பெயின்ட், பிளாக்டு அவுட் ரூஃப் வழங்கப்பட்டுள்ளது.



உள்புறம் புதிய டேஷ்போர்டு வடிவமைப்பு, புதிய சீட் ஃபேப்ரிக்குகள், ஹெட்லைனர்கள் வழங்கப்படுகிறது. இத்துடன் பேடில் ஷிஃப்டர்கள், 360 டிகிரி கேமரா உள்ளிட்டவையும் வழங்கப்பட்டுள்ளது. 

புதிய ஸ்விஃப்ட் ஃபேஸ்லிப்ட் மாடலில் 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இது 90 பிஹெச்பி பவர் வழங்குகிறது. இத்துடன் சிவிடி டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது. இத்துடன் மைல்டு ஹைப்ரிட் என்ஜினும் வழங்கப்படுகிறது. இதில் 1.2 லிட்டர் என்ஜினுடன் 3.0 பிஹெச்பி பவர் எலெக்ட்ரிக் மோட்டார் வழங்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News