ஆட்டோமொபைல்
மாருதி சுசுகி எஸ் கிராஸ்

மாருதி சுசுகி எஸ் கிராஸ் பிஎஸ்6 வெளியீட்டு விவரம்

Published On 2020-05-11 07:12 GMT   |   Update On 2020-05-11 07:12 GMT
மாருதி சுசுகி நிறுவனத்தின் எஸ் கிராஸ் பிஎஸ்6 மாடலின் இந்திய வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.



மாருதி சுசுகி நிறுவனம் தனது புதிய எஸ் கிராஸ் பிஎஸ்6 பெட்ரோல் மாடலை நாட்டில் ஊரடங்கு உத்தரவு நிறைவுற்றதும் அறிமுகம் செய்ய இருக்கிறது. முன்னதாக புதிய கார் வெளியீட்டை உணர்த்தும் டீசரை தனது அதிகாரப்பூர்வ வலைதளத்தில் மாருதி நிறுவனம் வெளியிட்டு இருந்தது.

இதுதவிர மாருதி நிறுவனம் புதிய எஸ் கிராஸ் மாடலை 2020 ஆட்டோ எக்ஸ்போ விழாவில் காட்சிக்கு வைத்திருந்தது. இதில் காரில் மேற்கொள்ளப்பட்டு இருக்கும் மாற்றங்கள் அம்பலமானது.



அதன்படி புதிய எஸ் கிராஸ் மாடலில் சுசுகியின் 1.5 லிட்டர் SHVS மைல்டு ஹைப்ரிட் பெட்ரோல் என்ஜின் வழங்கப்படுகிறது. இதே என்ஜின் எர்டிகா, சியாஸ் மற்றும் விட்டாரா பிரெஸ்ஸா போன்ற மாடல்களிலும் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 104 பிஹெச்பி பவர், 13.8 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது.

புதிய பிஎஸ்6 மாடலில் மாருதி நிறுவனம் ஆப்ஷனல் 4 ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வசதியை வழங்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. புதிய என்ஜினில் ஐடில் ஸ்டார்ட் ஸ்டாப் சிஸ்டம், பிரேக் எனர்ஜி ரீ-ஜெனரேஷன் சிஸ்டம், டார்க் அசிஸ்ட் வசதி உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது.

இதனால் முந்தைய மாடல்களை விட புதிய மாடலில் மேம்பட்ட செயல்திறன் மற்றும் மைலேஜ் கிடைக்கிறது. புதிய பிஎஸ்6 ரக என்ஜின் தவிர காரில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இவற்றில் எல்இடி ஹெட்லேம்ப்கள், டெயில் லேம்ப்கள் மற்றும் அலாய் வீல்கள் வழங்கப்பட்டுள்ளன.
Tags:    

Similar News