ஆட்டோமொபைல்
ஜீப் காம்பஸ்

அடுத்த ஆண்டு இந்தியா வரும் ஜீப் காம்பஸ் புது வேரியண்ட்

Published On 2020-05-10 06:15 GMT   |   Update On 2020-05-09 11:58 GMT
ஜீப் நிறுவனத்தின் காம்பஸ் மாடலின் புதிய வேரியண்ட் அடுத்த ஆண்டு இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.



ஜீப் நிறுவனம் தனது காம்பஸ் எஸ்யுவி  மாடலை இந்தியாவில் 2017 ஆம் ஆண்டு அறிமுகம் செய்தது. இந்தியாவில் அறிமுகமானது முதல் இந்த எஸ்யுவி அதிக பிரபலம் அடைந்து வருகிறது. தற்சமயம் இந்த எஸ்யுவி ஐந்து பேர் பயணிக்கக்கூடிய வகையில் கிடைக்கிறது. 

இந்நிலையில், தற்சமயம் வெளியாகி இருக்கும் தகவல்களில் காம்பஸ் எஸ்யுவி மாடலின் ஏழு பேர் பயணிக்கக்கூடிய வேரியண்ட் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக கூறப்படுகிறது. இது மூன்று அடுக்கு இருக்கைகளை கொண்டிருக்கும் என தெரிகிறது.



இத்துடன் 4 மீட்டர் அளவுக்குள் எஸ்யுவி மாடல் ஒன்றும் அறிமுகம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது. புதிய ஜீப் காம்பஸ் மாடல் நீண்ட வீல்பேஸ் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. இதன் வடிவமைப்பு பார்க்க காம்பஸ் ஃபேஸ்லிப்ட் மாடலை போன்று காட்சியளிக்கும் என தெரிகிறது. 

புதிய காரில் மேம்பட்ட கிரில், ஹெட்லேம்ப்கள் மற்றும் பம்ப்பர்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்த கார் 2.0 லிட்டர் டீசல் என்ஜின் கொண்டிருக்கிறது. ஏழு பேர் பயணிக்கக்கூடிய ஜீப் காம்பஸ் மாடல் இந்தியாவில் அடுத்த ஆண்டின் இரண்டாவது காலாண்டு வாக்கில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்திய சந்தையில் அறிமுகமானதும் இந்த எஸ்யுவி மாடல் ஃபோக்ஸ்வேகன் டிகுவான் ஆல்ஸ்பேஸ், ஹூண்டாய் டக்சன், ஸ்கோடா கோடியாக் மற்றும் டொயோட்டா ஃபார்ச்சூனர் போன்ற மாடல்களுக்கு போட்டியாக இருக்கும் என தெரிகிறது.
Tags:    

Similar News