ஆட்டோமொபைல்
பிஎம்டபிள்யூ 8 சீரிஸ்

இந்தியாவில் 2020 பிஎம்டபிள்யூ 8 சீரிஸ் அறிமுகம்

Published On 2020-05-09 10:48 GMT   |   Update On 2020-05-09 10:48 GMT
பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் புதிய 8 சீரிஸ் கார் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது.



பிஎம்டபிள்யூ நிறுவனம் தனது 8 சீரிஸ் கிரான் கூப் மற்றும் எம்8 கூப் மாடல்களை இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. புதிய பிஎம்டபிள்யூ 8 சீரிஸ் கிரான் கூப்- 840ஐ கிரான் கூப் மற்றும் 840ஐ கிரான் கூப் எம் ஸ்போர்ட் எடிஷன் என இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது.

பிஎம்டபிள்யூ 840ஐ கிரான் கூப் விலை ரூ. 1.30 கோடி என்றும் 840ஐ கிரான் கூப் எம் ஸ்போர்ட் எடிஷன் விலை ரூ. 1.55 கோடி என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இத்துடன் பிஎம்டபிள்யூ நிறுவனம் டாப் எண்ட் எம்8 கூப் மாடலையும் இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. இதன் விலை ரூ. 2.15 கோடி என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ் ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பிஎம்டபிள்யூ 8 சீரிஸ் கிரான் கூப் மற்றும் எம்8 கூப் மாடல்கள் அந்நிறுவனத்தின் ஆன்லைன் விற்பனை தளத்தில் விற்பனை செய்யப்படுகிறது. இந்திய சந்தையில் புதிய 8 சீரிஸ் பிஎம்டபிள்யூ நிறுவனததின் அதிநவீன ஃபிளாக்ஷிப் கூப் மாடல் ஆகும். 



புதிய பிஎம்டபிள்யூ 8 சீரிஸ் கிரான் கூப் மாடல் 5 மீட்டர் நீளமாகவும், 2 மீட்டர் அகலமாகவும் இருக்கிறது. இரு புதிய மால்களிலும் கம்பீர ஸ்டைலிங் மற்றும் ஸ்போர்ட் தோற்றம் கொண்டிருக்கின்றன. இத்துடன் அதிக அம்சங்கள் மற்றும் எலெக்டிரானிக் வசதிகளும் இரு கார்களில் வழங்கப்பட்டுள்ளன.

பிஎம்டபிள்யூ 840ஐ கிரான் கூப் மற்றும் 840ஐ எம் ஸ்போர்ட் எடிஷன் மாடலில் 3.0 லிட்டர் 6 சிலிண்டர் டர்போ சார்ஜ் செய்யப்பட்ட பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 340 பிஹெச்பி பவர், 500 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 8 ஸ்பீடு ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது.

பிஎம்டபிள்யூ எம்8 கூப் மாடலில் 4.4 லிட்டர் வி8 டர்போசார்ஜ் செய்யப்பட்ட பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இது 600 பிஹெச்பி பவர், 750 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 8 ஸ்பீடு ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News