ஆட்டோமொபைல்
ஹோண்டா ஜாஸ்

சத்தமில்லாமல் உருவாகும் ஹோண்டா காம்பேக்ட் எஸ்யுவி

Published On 2020-05-08 15:51 IST   |   Update On 2020-05-08 15:51:00 IST
ஹோண்டா நிறுவனத்தின் புதிய காம்பேக்ட் எஸ்யுவி மாடல் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.



ஹோண்டா நிறுவனம் 4 மீட்டர் அளவுக்குள் புதிய எஸ்யுவி மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த கார் இசட்ஆர் வி எனும் பெயரில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக கூறப்படுகிறது. 

புதிய காம்பேக்ட் எஸ்யுவி இந்திய சந்தையில் மாருதி சுசுகி விட்டாரா பிரெஸ்ஸா, ஹூண்டாய் வென்யூ மற்றும் விரைவில் அறிமுகமாக இருக்கும் கியா சொனெட் போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

சர்வதேச சந்தையில் புதிய ஹோண்டா இசட்ஆர் வி மாடல் இந்த ஆண்டின் இரண்டாவது அரையாண்டு காலக்கட்டத்தில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இதன் வெளியீடு தற்போதைய கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ஒத்திவைக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.



இந்தியாவில் ஹோண்டா இசட்ஆர் வி மாடல் அடுத்த ஆண்டு துவக்கத்தில் அறிமுகம் செய்யப்படலாம் என தெரிகிறது. என்ஜினை பொருத்தவரை புதிய ஹோண்டா இசட்ஆர் வி மாடலில் 1.0 லிட்டர் டர்போசார்ஜ் செய்யப்பட்ட பெட்ரோல் என்ஜின் மற்றும் 1.5 லிட்டர் டீசல் மோட்டார் வழங்கப்படலாம்.

இந்த காம்பேக்ட் எஸ்யுவி மாடலில் மேனுவல் மற்றும் ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படலாம். இத்துடன் இந்த கார் 1.2 லிட்டர் iVTEC மற்றும் 1.5 லிட்டர் iVTEC பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் iVTEC டீசல் யூனிட் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Similar News