ஆட்டோமொபைல்
மெர்சிடிஸ் பென்ஸ் இ 350 டி

இந்தியாவில் மெர்சிடிஸ் பென்ஸ் இ 350 டி மாடல் அறிமுகம்

Published On 2020-04-25 11:32 GMT   |   Update On 2020-04-25 11:32 GMT
மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் இ 350 டி கார் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.



மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் இ 350 டி மாடலை அறிமுகம் செய்துள்ளது. புதிய மெர்சிடிஸ் பென்ஸ் இ 350 டி மாடலின் துவக்க விலை ரூ. 75.29 லட்சம், எக்ஸ் ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. புதிய இ 350 டி மாடல் எலைட் வேரியண்ட்டில் கிடைக்கிறது. 

புதிய மெர்சிடிஸ் பென்ஸ் இ 350 டி மாடல் இ சீரிஸ் டாப் எண்ட் மாடலாக இருக்கிறது. இதில் பிஎஸ்6 ரக டீசல் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் எஸ் 350 டி மற்றும் ஜி 350 டிமாடல்களில் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளது. புதிய மாடலில் 3.0 லிட்டர் வி6 என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. 



இந்த என்ஜின் 282 பிஹெச்பி பவர், 620 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் பிஎஸ்4 மாடலை போன்றே 9ஜி டிரானிக் ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படும் என கூறப்படுகிறது. பிஎஸ்4 மாடலுடன் ஒப்பிடும் போது புதிய என்ஜின் 20 பிஹெச்பி மற்றும் 20 என்எம் டார்க் அதிக செயல்திறன் வழங்கும் என தெரிகிறது.  

புதிய மெர்சிடிஸ் பென்ஸ் இ கிளாஸ் மாடல் மணிக்கு 0 முதல் 100 கிலோமீட்டர் வேகத்தை வெறும் 5.7 நொடிகளில் எட்டிவிடும் என மெர்சிடிஸ் பென்ஸ் தெரிவித்துள்ளது. மேலும் இதன் அதிகபட்ச வேகம் மணிக்கு 250 கிலோமீட்டராக கட்டுப்படுத்தப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

புதிய என்ஜின் தவிர மெர்சிடிஸ் பென்ஸ் இ 350 டி மாடலில் 18 அங்குல அளவில் பெரிய அலாய் வீல்கள் வழங்கப்படுகிறது. இத்துடன் எல்இடி ஹெட்லேம்ப்கள், எல்இடி டிஆர்எல்கள், 360 டிகிரி கேமரா என பல்வேறு அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன.
Tags:    

Similar News